Wednesday, May 5, 2010

மாணவர் மரங்கள்!


''வீட்டுக்கு ஒரு மரம் வைப் போம்... நாட்டுக்கு ஒரு நலன் செய்வோம்!'' என கரூரில் எங்காவது சுவர் விளம்பரங்களோ, விழிப்பு உணர்வு ஊர்வலமோ தென் பட்டால்... நிச்சயம் அது கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பாகத்தான் இருக்கும்!

கரூர் வள்ளுவர் கல்லூரி... முழுக்க முழுக்கப் பசுமை தவழும் வளாகம். நுழைவாயிலில் மாணவர்கள் நட்டு வைத்த மரங்களின் வனப்பு நம் மனதைக் கவர்கிறது.

கல்லூரியின் எம்.டி-யான செங்குட்டுவன் நம்மிடம், ''எனக்கும் என்னோட குடும்பத்தினருக்கும் இயற்கை மற்றும் தாவரங்கள் மீது அதிகப் பற்று. அதனால், கடந்த எட்டு வருஷமா எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு மாணவனின் பிறந்த நாளுக்கும், ஒரு மரக்கன்று பரிசாகக் கொடுக்கிறோம். கரூர் அரசு தோட்டக் கலைப் பண்ணையில் இருந்து பெற்று, எல்லா வகையான மரக் கன்றுகளும் பரிசளிப்போம். மாணவர்கள் வளர்க்கின்ற மரங்களை, அந்த ஒரு வருட முடிவில் பார்த்து, மதிப்பெண் கொடுத்து, சிறப்புப் பரிசுகளும் வழங்குகிறோம்.


அதோடு, கரூர் நேஷனல் ஹைவே ரோடு இரு புறமும் மரங்களை நட்டு, பராமரித்து வளர்த்து வருகிறோம். இதுவரை சுமார் 4,000 மரக்கன்றுகளை பராமரித்து வளர்த் துள்ளோம். ஏப்ரல் மூன்றாம் தேதி 210 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி, 10 ஆயிரம் மரக் கன்றுகளைக் கொடுத்தோம். வேப்ப மரக் கன்று, புளிய மரக் கன்று, அரளி என இப்போது எல்லாமே மரங்களாக எழுந்து நிற்கின்றன!'' என்றார் சந்தோஷமாக.

கல்லூரியின் முதல்வர் சிவசங்கரன், ''நாங்கள் இந்த முறை கொடுத்த 10 ஆயிரம் மரக் கன்றுகளையும் எங்கள் கல்லூரியில் நட்டு, ஒவ்வொரு மரத்திலும் அந்த மாணவரின் பெயர் எழுதி, வகுப்பையும் எழுதிவைப்போம். கல்லூரி முடித்துவிட்டு, எதிர்காலத்தில் தன் குடும்பத்தோட இந்தக் கல்லூரிக்கு அந்த மாணவர் வந்து பார்க்கும்போது, அல்லது அவரின் மகனோ, மகளோ வந்து இந்தக் கல்லூரியில் படிக்கும்போது, அது நிச்சயம் ஓர் ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும்!'' என்றார் குதூகலமாக!


- நன்றி ஜூ.வி


7 Comentários:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

*இயற்கை ராஜி* said...

நல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள்

மாதேவி said...

"பசுமை தவழும் வளாகம்"வாழ்த்துவோம்.

venkat said...

கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு valthukal

cheena (சீனா) said...

கரூர் வள்ளுவர் கல்லூரி நிரவாகத்திற்கும் மாணவச் செல்வங்களுக்கும் நல்வாழ்த்துகள்

பகிர்வினிற்கு நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

அடடே!!
அருமையான முயற்சி..

வாழ்த்துக்கள்..

பிரேமா மகள் said...

விளம்பர நோக்கத்தை தாண்டி நல்ல விசயம் செய்யும் இவர்களை மனதார பாராட்டலாம்..

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO