Monday, December 13, 2010

சங்கமம்‘2009 பற்றி பதிவர் பழமைபேசி


வணக்கம் மக்களே, வணக்கம்! ஈரோடு வலைஞர்களும், பதிவர்களும், வாசகர்களுமாய்ச் சேர்ந்து ஒரு முன்னுதாரணத்தை உண்டு செய்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். குறித்த நேரத்திற்கு தேநீர் மற்றும் கொங்கு நாட்டிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் துவங்கியது ஆரவாரம்.

பின்னர், விழா தொகுப்பாளர் கதிர்‍‍‍‍‍ ஈரோடு அவர்கள் நிகழ்ச்சியை தமிழ் வணக்கமுடன் முன்னுரைக்க, ஆருரன் விசுவநாதன் அவர்கள் தொகுத்தளிக்கப் பணிக்கப்பட்டார்.

பின்னர் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு வாழ்த்துரைக்க வந்த விருந்தினர்கள் எனப் பலரும் சிறப்பாகப் பேசினர். கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்றனர்.

சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமம் மற்றும் தமிழ்மணம் திரட்டிக்குத் தமிழ்ச்சமுதாயம் மிகவும் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது!

நன்றி பழமைபேசி






.

2 Comentários:

சகாதேவன் said...

ஈரோடு வலைப்பதிவர் குழுமம் நடத்திய சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியில் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு வாழ்த்துரைக்க வந்த விருந்தினர்கள் என கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்ற அந்த விழாவில் பலரும் சிறப்பாகப் பேசினர் என்று அறிய மகிழ்ச்சி.
அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் எழுதினால் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.

சகாதேவன்

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

//சகாதேவன் said...
அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் எழுதினால் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.//

வணக்கம் சகாதேவன். தாங்கள் கீழ்கண்ட இணைப்பைச்சுட்டி சென்றவருட சங்கமம்‘2009 நிகழ்ச்சி முழுவதையும் கணொளிகள் மூலம் காணலாம். நன்றி..

http://erodetamizh.blogspot.com/2010/01/20-2009.html

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO