Sunday, January 24, 2010

ஈரோட்டில் ஜெயமோகன் "இன்றைய காந்தி" நூல் வெளியீட்டு விழா





இன்று காலை 10 மணியளவில் "இன்றைய காந்தி" நூல் வெளியீட்டுவிழா நடைபெறுவதாக அழைப்பிதழ் கிடைத்தது. இயல்பான செயல்பாடுகளில் இருந்து வேறுபடும் நாள் ஞாயிறு என்பது மட்டுமே அந்நாளைப் பற்றிய என் புரிதல். மெதுவாக எழுவது, குளிக்காமல் காலை உணவருந்துவது, 11 மணிக்கு படுத்து தூங்குவது, மதியம் என் அறையை சுத்தப்படுத்துவது, மாலையில் குளிப்பது, இரவு குடும்பத்தினரோடு ஊர் சுற்றுவது இப்படி பல...............


ஒரு மாற்றாக, இன்று நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து தயாராகி, கூட்டம் நடைபெறும் அரங்கினுள் நுழையும் போது, சராசரி இந்தியனாகி, வரவேற்புரை முடிந்து, புத்தகம் வெளியிடப்பட்டு, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசி முடித்து, திரு ஆறுமுகத் தமிழன் பேசிக் கொண்டிருந்த போதுதான் தாமதமாக உள் நுழைந்தேன்...

"இன்றைய காந்தி" புத்தகத்தில், மொழிவழி தேசியத்தை விடுத்து பண்பாட்டு வழி தேசியம் சரி என்ற ஜெயமோகனின் எழுத்துக்கள் சரியல்ல, என்ற தன் விமர்சனத்தை முன்னிறுத்தி பேசிக் கொண்டிருந்தார். ஈழப்பிரச்சனை குறித்து ஜெயமோகன் பார்வையில் சிறு தடுமாற்றம் உள்ளது என்பதாக அவர் பேசினார்.

ஆனித்தரமான பேச்சு, அழகான சொல்லாடல்கள், சொல்ல வந்ததை விவரித்தமை மிக அருமையாக இருந்தது. இந்த நூல் காந்தியை ஒரு புதிய கோணத்தில் நெருங்கிச் சென்று பார்க்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பேசவந்த "மரபின் மைந்தர் முத்தையா" இந்த புத்தகத்தில் காந்தியைப் பற்றிய பல்வேறு அறியப்படாத தகவல்கள் இருக்கின்றன. காந்தியின் பிள்ளைகள் குட்டிச் சுவராகப் போனதாக பலரும் பல இடங்களில் பேசுவதை காண்கிறோம். அது தவறு, ஒரு பிள்ளையைத் தவிர மற்ற மூவரும் மிகப் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள், என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது என்று கூறினார்.

அடுத்து வந்தவர், பெயர் மறந்துவிட்டேன்....(நண்பர் மன்னிக்கவும்.....)காந்தி பற்றிய தன் ஆய்வையும், அவர்வாழ்க்கை முறை பற்றியும் காந்தியின் ஆளுமை பற்றியும் நிறைய பேசினார். காந்தி என்ற மகாத்மாவின் சாதனைகளை பட்டியலிட்டுச் சொன்னார். எதற்காக அந்த காந்தி புகழ் பாடும் பேச்சு, என்பது புரியவில்லை. காந்தி ஜெயந்தி விழாவில் நம்மூர் கதர் சட்டைகளின் பேச்சை மீண்டும் நினைவு படுத்தினார்.

காந்தியை பற்றிய எந்த உள்ளார்ந்த உருவகமும் இல்லாமல் வளர்ந்தவன். காந்தியின் படங்கள், அவர் பற்றிய பேச்சுக்கள் போன்ற எந்த ஆளுமையும் என்னுள் நிறைந்ததில்லை. ஆதியின் படங்கள் தான் முதன்முதலில் அவரை நோக்கி என்னை திரும்பி பார்க்க வைத்தவை என்ற தகவல் பகிர்வோடு பேசத் தொடங்கினார் பவாசெல்லத்துரை. இடது சாரிகள் இந்த புத்தகத்தினை விமர்சிப்பார்கள் என்று நாஞ்சில் நாடன் பேசினர். நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை, ஆனால் ஜெயமோகன் எழுத்துகளை நான் அறிவேன், புத்தகத்தின் சில வரிகளை மேற்கோள் காட்டி, காந்தியைப் புரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும் என்றும் பேசினார்.

வழக்கமான, தனக்கே உரித்தான பாணியில் மார்க்ஸிய தாக்கத்தைப் பற்றி பேசியவர், விரைவில் ஜெயமோகன்" "இ.எம்.எஸ்" பற்றிய ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற தன் கோரிக்கையையும், மேடையில் வைத்தார்.

ஜெயமோகனும் தன் ஏற்புரையில் எழுதுவதாக உறுதி சொன்னார். விரைவில் தோழர் இ.எம்.எஸ் பற்றிய ஜெ.மோ.வின் புத்தகத்தை அனைவரும் எதிர்பார்க்கலாம்.......

இறுதியாக ஏற்புரை வழங்க வந்த ஜெயமோகனின் பேச்சு, அற்புதம். இந்த புத்தகம் எதற்காக எழுதப்பட்டது என்பதில் தொடங்கி, ஒரு நீண்ட ரசிக்கும்படியாக,பல புதிய தகவல்களோடு சிந்தனையை துண்டும் ஒரு உரையாக அமைந்தது.


சில மாதங்களுக்கு முன் ஒருநாள் தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மூத்த தலைவரோடு பேசிக் கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் காங்கிரஸ்காரரான அவர் பேசும் போது, "வல்லபாய் பட்டேலை தவிர்த்து நேருவை பிரதமராக ஆக்க காந்தி முடிவு செய்ததன் காரணம், குறைந்தது 20 ஆண்டுகளாவது, இந்தியா ஒரு தலைமையின் கீழ் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும், பட்டேலின் வயது அதற்கு தடையாக இருந்தது....காந்தி நினைத்தது போல் சில ஆண்டுகளிலேயே பட்டேல் மறைந்தார். என்று காந்தியின் தொலைநோக்குப் பார்வை குறித்து பேசினார்.

இன்று ஜெ,மோ பேசும்போது, தன்னுடைய நம்பிக்கைகுரிய விசுவசியாகவும், சொந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் பட்டேலை தவிர்த்து நேருவை பிரதமராக்கியது, இந்த நாட்டின் நலன் கருதிதான். தன்னுடைய கருத்துக்கள், கொள்கைகள், நேருவால் பின்பற்றப்படாது என்று தெரிந்தும், அவரை பிரதமராக்கியது நேருவின் மதச்சார்பிமை கொள்கைதான் என்ற தன் கருத்தை அழகாக வெளிப்படுத்தினார்.

காந்தியை பற்றிய தவறான விமர்சனங்களும், அவர் பற்றிய மக்களின் புரிதலும் தான் இந்த புத்தகம் வெளிவர காரணமாக இருந்தது. மகாத்மாக உருவகப்படுத்த பட்ட காந்தியைப் பற்றி இதில் எழுதவில்லை. காந்தியைப் பற்றிய நம் மூடத்தனமான புரிதலை நீக்கி, காந்தி எப்படிப்பட்டவர் என்று படித்து அறிந்து கொள்ளும் வகையில் பல தகவல்களைத் திரட்டி இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளேன்.


திரு ஆறுமுகத் தமிழன் விமர்சனம் குறித்துப் பேசிய ஜெ.மோ, ஆயுதப் போராட்டத்தின் தோல்விகள் மிகுந்த வலியை கொடுத்துள்ளன. பல லட்சம் பேரை இழந்து இன்று தோற்றிருக்கிறோம். ஆயுதப் போராட்டங்கள் வெற்றிதராது என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. காந்திய பாதை தான் என்றும் நிலைத்திருக்கும். கால மாற்றம் காந்தீயத்தை அழித்துவிடமுடியாது...என்ற ஒரு விரிவான உரையை ஆற்றினார்.


இறுதியாக நன்றி கூற வந்த நண்பர் விஜயராகவன் ஒரு அழகான கருத்தைச் சொன்னார். ஒரு கருத்தை வாதம் செய்வது, எதிர்வாதம் செய்வது, ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள அல்ல, இறுதியில் ஒர் புரிதலோடு இருவரும் பிரிதல்தான் என்று குறிப்பிட்டது மிகவும் உண்மையான சிந்தனையை தூண்டிய கருத்து.


கண்மூடித்தனமாக காந்தியை விமர்சிப்பவர்களுக்கும், காந்தியை புனிதராக கொண்டாடுவோருக்கும், இடையே காந்தியை பல்வேறு கோணங்களில் இருந்து எழுதியிருக்கும் ஜெ.மோ வின் இந்த புத்தகம் காந்தியைப் பற்றிய ஒரு பெரும் புரிதலைத் தரும் என்று நம்புகிறேன்.


காந்தியத்தின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டு, காந்தி நூற்றாண்டு விழாவை ஈரோட்டில் நடத்தி, காந்திய சிந்தனைகளை சுமார் 20 தொகுதிகளாக வெளியிட்ட என் தந்தையோடு, நான் வேறுபட்டு, பல இடங்களில் கண்மூடித்தனமாக, அரை குறை கேள்வி ஞானத்தோடு காந்தியை நான் பல இடங்களில் விமர்சித்தது உண்டு.


இந்த புத்தகத்தை படிக்கவில்லை. விரைவில் படித்து முடித்துவிடுவேன். அதன் பின் காந்தி பற்றிய என் பார்வை விசாலமாகலாம். என் புரிதல் கூடலாம்... இது வரை நான் பேசியதற்காக வருத்தமும் படலாம்......


மிகுந்த எதிர்பார்ப்புகளோடும், காந்தி பற்றிய என் தவறான புரிதலின் காரணம் தேடியும் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றேன்.............


அன்புடன்
ஆரூரன்.



27 Comentários:

vasu balaji said...

படிக்கத் தூண்டும் விமரிசனம். தொகுத்தளித்தமைக்கு நன்றி ஆரூரன்.

பிரபாகர் said...

அய்யா சொல்வதுதான், படிக்கத்தூண்டுகிறது. நன்றி ஆரூரன்.

பிரபாகர்.

Anonymous said...

நிகழ்ச்சி பற்றிய கச்சிதமாக தொகுப்புக்கு நன்றி

- ஜெ. ராம்கி

*இயற்கை ராஜி* said...

நல்ல தொகுப்பு

ஈரோடு கதிர் said...

நண்பர் விஜயராகவன் அழைத்திருந்தார்.... தவிர்க்கவே முடியாததால் வரவில்லை... அதைவிட நிகழ்ச்சி குறித்து உங்கள் வார்த்தைகளில் கேட்டது மிக்க மகிழ்ச்சி

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு. பொதுமக்கள் தொடர்பிற்கு செய்திதாள் தவிர வேறெதுவும் இல்லாத காலத்திலே மக்கள் சக்தி திரட்டி மகத்தான சாதனை புரட்சி செய்த மகாத்மா பற்றிய இந்த புத்தகத்தின் விமர்சனத்தையும் சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.

மாடல மறையோன் said...

வலைபதிவின் பெயர்: ஈரோடு வலைபதிவர்கள் குழுமம். ஆனால், ஆருரன் என்பவர் எழுதியதைப்பார்த்தால், அவர் தன்னைப்பற்றியும் எழுதுகிறார்.

கூட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும்போது, அது வலைபதிவர்கள் குழுமத்தின் சார்ப்பாகத்தான் எழுதப்பட்வேண்டும். தனிநபர் ஆசை, நிராசைகளப்பற்றிக் கதைக்க கூடாது.

தன்னைப்பற்றி எழுத அவாவானால், ஆருரன், தன் சொந்தவலைப்பூவில் எழுதலாம். அதுவே முறை.

மாடல மறையோன் said...

போகட்டும்.

நூலைப்பற்றி.

காந்தியைப்பற்றி பலர் மாறுபட்ட கோணங்களில் (unconventional angles) அலசியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் அல்ல.

ஏனெனில், Gandhi is one of the Holy Cows, along with Netaji, Sivaji, Nehru, Ambedkar, Subramania Bharati யாரும் அவர்கள் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் எழுத முடியாது இந்தியாவில். வெளிநாட்டரும் முடியாது. சிவாஜியைப்பற்றி எழுதிய அமெரிக்கரின் நூலால் முமபையில் கல்வரம். அந்த அமெரிக்கர் இந்தியா வந்தால் தொலைந்தார்.

வெளிநாட்டார் அங்கேயே எழுதி அவர்களுக்குள்ளே படித்துக்கொள்வார்கள். George Orwell's open attack on Gandhi was well received in UK and USA.

தமிழில் எனக்குத்தெரிந்தவரை. ஜெயமோகன் நூல் முதல் முறையாக எனச்சொல்லலாம். However, it too treats him, as I understand, from rightist view, so he wont have any problem.

ஜெயமோகன் பார்வை பன்முகப்பார்வை என்றாலும், அவர் தனக்கென்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டார். அதன்படியே அவர் நூல் பலரால் படிக்கப்படும் என நினைக்கிறேன். எல்லாராலுமல்ல.

காந்தி படும் பாடு பரிதாபமானது. Right and Left இருவருமே காந்தியைப்பற்றி கடுமையான விமர்ச்னம் வைக்கிறார்கள்.

ஒருவேளை இன்னூல் Between the two ஆக இருக்குமோ?

மாடல மறையோன் said...

போகட்டும்.

இத்தகைய நூல்களால் யாது பயன்? இன்று காந்தியின் சிந்தனைகள் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தியர்கள் என்னும் போது, அது காந்தி எதிர்ப்பாளர்களை மட்டுமல்ல. அனைவரையும்தான்.

காந்தி ஜெயுந்தியும் ஏதோ ஒரு tradition ஆகத்தான் கொண்டாடப்படுகிறதே ஒழிய, ஒரு ஆர்வத்தில் கொண்டாடப்படுவதில்லை.

காந்தியும் அவரை நினைகூறும் தலைமுறைகளும் ஏறக்குறைய மறந்துவிட்டன. அடுத்த தலைமுறை முழுக்கமுழுக்க காந்தியை ஒரு வரலாற்று நாயகனாக மட்டுமே - அதாவது, அசோகர், ஹர்சர், சோழன், சேரன், போன்று - பார்க்கும்.

இன்னூலகள் நூலகங்களில் ஆராய்ச்சி மாணவர்களால் படிக்கப்படும். அவ்வளவே.

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ//

அய்யா... எங்கள் குழுமத்தில் உள்ள உறுப்பினர்கள், தங்கள் சார்பில் இடுகை இட விரும்பினால் இங்கு இட அனுமதியுண்டு....

இந்த தளத்தில் யார் இடுகையிடலாம், யார் இடக் கூடாது என்று உறுப்பினர்கள் மட்டும் தான் தீர்மானிக்க முடியும்

நீங்கள் தீர்மானிக்க முடியாது...

இடுகையில் உள்ள விசயம் பற்றி மட்டும் உங்கள் கருத்தை கூறுங்கள். அதை விடுத்து யார் எழுதலாம் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டாம்.

செ.சரவணக்குமார் said...

நிகழ்ச்சியை நேரில் கண்டதுபோல் இருந்தது உங்கள் பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

கலகலப்ரியா said...

மிக மிக மிக அருமை ஆரூர்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கலகலப்ரியா said...

//பல இடங்களில் கண்மூடித்தனமாக, அரை குறை கேள்வி ஞானத்தோடு காந்தியை நான் பல இடங்களில் விமர்சித்தது உண்டு.//

இப்டி எழுத ஒரு மனசு வேணும் ஆரூர்..!!! இதுதான் பக்குவம் அப்டிங்கிறது..! .. எல்லாம் தெரிந்து பேசுபவர்கள் பெருகி விட்டார்கள்.. இப்போதெல்லாம்..! நாம தெரிஞ்சத வச்சுக்கிட்டு படிப்படியா கத்துக்கிடுவோம் என்ன.. நாஞ்சொல்றது..?

மாடல மறையோன் said...

இப்படியும் ஒரு வரைமுறை வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. என் கருத்து ஒரு பொதுக்கருத்து. Of a common man. தமிழ்மணத்தைப்பயன்படுத்தி எல்லார் பார்வைக்குமல்லவா வைத்திருக்கிறீர்கள் இக்குழும வலைபதிவை? அதில் எழுதப்படும் கருத்துகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி எழுத அனைவருக்கும் உரிமை வருகிறதல்லவா? நான் எழுதிய கருத்தும் அப்படியே ஆருரன் எழுதியதை அடியொட்டி மட்டுமே வருகிறது?

காந்தியப்பற்றியும் ஜொமோவின் நூலைப்பற்றியுமா எழுதினார் ஆரூரன்? தான் எப்படி காந்தியைப்பற்றியும் இனி தான் எப்படி பார்ப்பேனோ என்பதைப்பற்றியும் இப்பதிவில்தானே உள்ளது?

பதிவில் உள்ள அனைத்து கருத்துகளையும் பற்றி படிப்பவர் அனைவரும் எழுதலாம். இல்லயென்றால், நீங்கள் ‘உறுப்பினருக்கு மட்டுமே இவ்வலைப்திவு’ என முன்பக்கத்தில் எச்சரிக்கலாம்.

கதிர்...be broadminded. Dont have caste system here. நாங்கள் தனி. நீங்கள் வேறு. எனபது தீண்டாமை. caste system.

தமிழர்தானே எல்லாரும். தமிழில்தானே எழுதிகிறீர்கள். ஜெய்மோகனின் நூல் தமிழ் நூல்தானே? அது தமிழர்களுக்காகத்தானே வெளியிடப்பட்டது? ஆருரன் தமிழர்தானே?

ஏன் இந்த Holier than thou மனப்பான்மை?

மாடல மறையோன் said...

ஈரோட்டுப் பதிவர்கள் எல்லாம் ஒரு ஜாதி. சென்னைப்பதிவர்கள்தான் எல்லாம் ஒரு ஜாதி. நெல்லைப்பதிவர்கள்தான் ஒரு ஜாதி. பெரியார் ஊரிலிருந்து இப்படிப்பட்ட தொடக்கமா?

இங்கு போய் முடிந்துவிடும் வலைபதிவு உலகம் கதிர். அதற்கு விதை தூவாதீர்கள்?

ஏற்கன்வே ‘நற்குடி’யில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார் ஒரு ஈரோட்டுப்பதிவாளர்.

Sabarinathan Arthanari said...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே.

காந்தியின் அகிம்சை நடைமுறை சத்தியமானது. எனவே எவ்வளவு காலமானாலும் தொடர்ந்து நடைமுறை படுத்த படும். மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஒபாமா போன்று..

vasu balaji said...

/பதிவில் உள்ள அனைத்து கருத்துகளையும் பற்றி படிப்பவர் அனைவரும் எழுதலாம்.//

மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் ஆரூரன் ஏன் இங்கு எழுதினார் என்ற கேள்வி ஏன் வந்தது? ஆரூரன் என்ன சொன்னார் என்பதைப் பற்றி பேச என்ன தடை? இங்கு ஏன் எழுத வேண்டும் என்ற பிரிவினை யார் உருவாக்கியது?

ஈரோடு கதிர் said...

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
ஈரோட்டுப் பதிவர்கள் எல்லாம் ஒரு ஜாதி. பெரியார் ஊரிலிருந்து இப்படிப்பட்ட தொடக்கமா?

இங்கு போய் முடிந்துவிடும் வலைபதிவு உலகம்

கதிர்...be broadminded. Dont have caste system here. நாங்கள் தனி. நீங்கள் வேறு. எனபது தீண்டாமை. caste system.//

அய்யா...பணிவாகவே கேட்கிறேன்

அடிப்படை புரிதலுக்கான நாகரிகம் கூடக் கிடையாத உங்களிடம்

இங்கு எங்கு வந்தது ஜாதியும், தீண்டாமையும் மற்றும் வேறு பிற வெங்காயங்களும்..

இந்தக் குழுமத்திற்கும் பெரியாருக்கும் எங்கே தொடர்பு வந்தது... சுய சிந்தனையோடு எழுதுங்கள் அய்யா

என் கூற்று.. ஈரோட்டில் உள்ள பதிவர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுமமாக இணைந்து வைத்திருக்கும் தளத்தில் அதில் உறுப்பினர்கள் எழுதலாம் என்பது மட்டும்தான்....

இதை உங்களுக்கு புரியும் வரை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்...... படியுங்கள்...

ஒரு கட்டத்தில் புரிந்து விடும்.....

அப்படியும்
புரியா விட்டால், இதை விட்டுவிட்டு உங்கள் பணியைத் தொடருந்து பாருங்கள்...

பழமைபேசி said...

நன்றிங்க ஆரூரன்! சிறப்பாகத் தொகுத்து எழுதி இருக்கிறீர்கள்!!

ஆரூரன் விசுவநாதன் said...

ஜோ.....உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி......

முடிந்தால். இன்றைய காந்தி புத்தகத்தை வாங்கி படித்துப் பாருங்கள்........பல அரிய தகவல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.....

அன்புடன்
ஆரூரன்.

மாடல மறையோன் said...

AV

Pl refer your mge timed 5;57 am.

I will read it no doubt when I get a copy in the library of my village or at Tirchendur College library which I frequent.

In English, there is a proverb:

Seeing is believing.

Similarly, we can say:

Reading is believing.

So, we must first read, then rate the book. But I am afraid, in your writing here there runs a hope the book may change you.

I think, neither hope nor despair should be entertained before reading a book.

We must go to the book with an extremely open mind.

Hope you agree.

மாடல மறையோன் said...

//என் கூற்று.. ஈரோட்டில் உள்ள பதிவர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுமமாக இணைந்து வைத்திருக்கும் தளத்தில் அதில் உறுப்பினர்கள் எழுதலாம் என்பது மட்டும்தான்....
//

சரிதான் கதிர். ஒத்துக்கொள்கிறேன். உறுப்பினர்கள் எழுதலாம் ‘ஈரோட்டு பதிவர்கள் குழுமம்’ என்ற தலைப்பில்.

அவர்கள் எழுதிவதைப் பற்றி படிப்பவர்கள் கருத்துகள் சொல்லக்கூடாத் என்றல்லவா சொல்கிறீர்கள்?

அதைத்தான் சொல்கிறேன்: அப்படி நீங்கள் விரும்பினால்,

போர்டு போடுங்கள் இப்படி:

‘’இந்த வலைபதிவில் உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்வர். ஆனால், அக்கருத்துகளையொட்டிய பின்னூட்டங்கள் போடும் உரிமை சக ஈரோட்டுப்பதிவர்களுக்கு மட்டுமே உண்டு. மற்றவருக்கு இல்லை”

இப்படிபோட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமல்லவா?

ஈரோடு கதிர் said...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

//சரிதான் கதிர். ஒத்துக்கொள்கிறேன். உறுப்பினர்கள் எழுதலாம் ‘ஈரோட்டு பதிவர்கள் குழுமம்’ என்ற தலைப்பில்.//

நன்றி ஜோ... ஒரு வழியாக இது புரிந்ததற்கு

//அவர்கள் எழுதிவதைப் பற்றி படிப்பவர்கள் கருத்துகள் சொல்லக்கூடாத் என்றல்லவா சொல்கிறீர்கள்?//

இடுகை பற்றி தாராளமாக சொல்லுங்கள்... யார் எழுதலாம்... யார் எழுதக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எங்கே உரிமை வந்தது

//அதைத்தான் சொல்கிறேன்: அப்படி நீங்கள் விரும்பினால்//

நாங்கள் அப்படி ஒன்றும் விரும்பவில்லை


//போர்டு போடுங்கள் இப்படி:
‘’இந்த வலைபதிவில் உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்வர். ஆனால், அக்கருத்துகளையொட்டிய பின்னூட்டங்கள் போடும் உரிமை சக ஈரோட்டுப்பதிவர்களுக்கு மட்டுமே உண்டு. மற்றவருக்கு இல்லை”//

சிரிப்புதான் வருகிறது....... இது முட்டாள்தனமான வாதத்தின் உச்சகட்டம் ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ

//இப்படிபோட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமல்லவா?//

எப்படிப்போட்டாலும் அதி புத்திசாலியாய் நடிப்பவர்களிடம் பிரச்சனை தீராதுங்க ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ

ஆரூரன் விசுவநாதன் said...

ஜோ.....

இந்த நிகழ்வு ஈரோட்டில் நடந்ததால், அதை குழுமத்தில் வெளியிட்டோம். நிகழ்வுகளை விவரிக்கும் போது, இறுதியில் கட்டுரை எழுதியவன் என்ற முறையில் என்னுள் தோன்றியவற்றையும் எழுதினேன். அவ்வளவே. இதற்கு இவ்வளவு பெரிய வினைகளும் எதிர் வினைகளும் அவசியமில்லாதது. மேலும் என் எண்ணத்தை எழுதியதற்குக் காரணம், என்னைப் போலவே பலரும் காந்தியின் மீது ஏதோ ஒரு காரணத்திற்காக வசைபாடியிருக்கலாம். அவர்கள் இதை படிக்கும் போது, அவர்களுக்கும் நல்ல தகவல்கள் போய்ச் சேரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதை எழுதினேன்.

ஆக்க பூர்வ ஆலோசனைகளையும், அறிவுப் பூர்வ கருத்தாக்கங்களையும் திறந்த மனதுடன் ஏற்க தயாராக இருக்கிறோம்.

வீண் விவாதங்களைத் தவிர்ப்போமே.......நம் அனைவரின் நலனுக்காகவும்............

க.பாலாசி said...

நன்றி ஆரூரன் அய்யா... நேற்று வரயியலாமைக்கு வருந்துகிறேன்.

மாடல மறையோன் said...

ஆருரன் !

ஆக்கப்பூர்வமானவற்றை இப்படிப்பட்ட மூடியமனது தடுத்துவிடும் என்பதே என்னச்சம்.

நீங்கள் உங்கள் கருத்து சொன்னது பற்றி நான் சொன்ன கருத்து சரியா தவறா எனச்சொல்லலாம்.

சொல்லவே கூடாது என்றல்லவா சொல்கிறார் கதிர்?

இப்படி பிறரை சொல்லக்கூடாது என்றால் ஏன் முன்பே அதை அறிவிக்கக்கூடாது?

என் போன்றவர்கள் எப்படி வருவார்கள் உங்கள் வலைப்பூவிற்கு.

இங்கு ஒருவர் உட்கார்ந்து கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் பண்ணினால்?

ஆருரன்:

கீழே கண்டதே ஒரு வலைப்பூவின் கொள்கையாக இருக்கவேண்டும்:

/எவரும் பின்னூட்டமிடலாம். எக்கருத்தையும் சொல்லலாம். அவர்கள் தடுக்கப்படமாட்டார்கள் அவர்கள் சொல்பிரயோகத்தில் மட்டும் நாகரிகம் கடைபிடிப்பாராயின்//

இப்படிப்பட்ட கொள்கையுடைய வலைப்பூக்களே தமிழ்மணத்தில் வரவேண்டும்.தமிழ்மணம் பொதுமன்றம் தமிழருக்காக. அங்கே நாங்கள் உங்களை நிறுத்துவோம் என்றெல்லாம் சொல்வது சுத்தமான தலிபானித்தனம்.

T.Duraivel said...

உங்கள் கட்டுரை அருமை. ஓர்வர் ஒரு நிகழ்ச்சி பற்றி எழுதும் போது தன்னை பாதித்த இடத்திலிருந்துதான் எழுத ஆரம்பித்தால்தான் அது உயிரோட்டமுள்ளதாக ஆகும் மற்றும் அதை வாசிப்பவனை சிறப்பாக சென்றடையும். இல்லையென்றால் ஒரு நிறுவனத்தின் ஆண்டறிக்கைபோலாகிவிடும். சில சமயம் எழுதுபவர்களின் எழுத்து சில சுவர்களால் முட்டிக்கொள்ளப்படும், அதைத்தாண்டவே முடியாது. இறுகிப்போன சுவர்கள் அவை. அவற்றை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. என்னுடைய கவலையெல்லாம் எழுதுபவர்களை இது உற்சாகமிழக்கச் செய்துவிடக்கூடாது என்பதுதான். சிலர் தான் தன் பொன்னான நேரத்தை செலவு செய்து எழுதுகிறார்கள். அவர்கள் இச்சுவர்களை அல்ட்சியம் செய்யும் வல்லமையை இறைவன் அருளட்டும்.
அன்புடன்
த.துரைவேல்

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO