Monday, May 17, 2010
Friday, May 14, 2010
வாழ்த்துகிறோம்....
மணவிழா வாழ்த்துக்கள் கார்த்திக் மற்றும் மஞ்சுபிரியா

வாழ்த்துக்கள் லண்டன் செல்லும் பதிவர் லாவண்யாவிற்கு
Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 5:30 PM 33 comments
Labels: வாழ்த்துக்கள்
Artigos Relacionados:Wednesday, May 5, 2010
மாணவர் மரங்கள்!
''வீட்டுக்கு ஒரு மரம் வைப் போம்... நாட்டுக்கு ஒரு நலன் செய்வோம்!'' என கரூரில் எங்காவது சுவர் விளம்பரங்களோ, விழிப்பு உணர்வு ஊர்வலமோ தென் பட்டால்... நிச்சயம் அது கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பாகத்தான் இருக்கும்!
கரூர் வள்ளுவர் கல்லூரி... முழுக்க முழுக்கப் பசுமை தவழும் வளாகம்.
நுழைவாயிலில் மாணவர்கள் நட்டு வைத்த மரங்களின் வனப்பு நம் மனதைக் கவர்கிறது.
கல்லூரியின் எம்.டி-யான செங்குட்டுவன் நம்மிடம், ''எனக்கும் என்னோட குடும்பத்தினருக்கும் இயற்கை மற்றும் தாவரங்கள் மீது அதிகப் பற்று. அதனால், கடந்த எட்டு வருஷமா எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு மாணவனின் பிறந்த நாளுக்கும், ஒரு மரக்கன்று பரிசாகக் கொடுக்கிறோம். கரூர் அரசு தோட்டக் கலைப் பண்ணையில் இருந்து பெற்று, எல்லா வகையான மரக் கன்றுகளும் பரிசளிப்போம். மாணவர்கள் வளர்க்கின்ற மரங்களை, அந்த ஒரு வருட முடிவில் பார்த்து, மதிப்பெண் கொடுத்து, சிறப்புப் பரிசுகளும் வழங்குகிறோம்.

அதோடு, கரூர் நேஷனல் ஹைவே ரோடு இரு புறமும் மரங்களை நட்டு, பராமரித்து வளர்த்து வருகிறோம். இதுவரை சுமார் 4,000 மரக்கன்றுகளை பராமரித்து வளர்த் துள்ளோம். ஏப்ரல் மூன்றாம் தேதி 210 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி, 10 ஆயிரம் மரக் கன்றுகளைக் கொடுத்தோம். வேப்ப மரக் கன்று, புளிய மரக் கன்று, அரளி என இப்போது எல்லாமே மரங்களாக எழுந்து நிற்கின்றன!'' என்றார் சந்தோஷமாக.
கல்லூரியின் முதல்வர் சிவசங்கரன், ''நாங்கள் இந்த முறை கொடுத்த 10 ஆயிரம் மரக் கன்றுகளையும் எங்கள் கல்லூரியில் நட்டு, ஒவ்வொரு மரத்திலும் அந்த மாணவரின் பெயர் எழுதி, வகுப்பையும் எழுதிவைப்போம். கல்லூரி முடித்துவிட்டு, எதிர்காலத்தில் தன் குடும்பத்தோட இந்தக் கல்லூரிக்கு அந்த மாணவர் வந்து பார்க்கும்போது, அல்லது அவரின் மகனோ, மகளோ வந்து இந்தக் கல்லூரியில் படிக்கும்போது, அது நிச்சயம் ஓர் ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும்!'' என்றார் குதூகலமாக!
- நன்றி ஜூ.வி
Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 6:13 PM 7 comments
Labels: சமூகம், பகிர்வு, மரம் வளர்ப்பு, விழிப்புணர்வு, ஜூனியர் விகடன்
Artigos Relacionados:Tuesday, April 27, 2010
நான் உதயச்சந்திரன் ஆனது எப்படி?
1993-ம் வருட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய அளவில் 38-வது ரேங்க் பிடித்தபோது உதயச்சந்திரனின் வயது 23. அந்தத் தேர்வுகளில் முதல் கட்டத்தைத் தாண்டவே தமிழக மாணவர்கள் தவித்துத் திண்டாடிய வேளையில், முதல் முயற்சியிலேயே அந்த உயரம் தொட்ட உதயச்சந்திரனின் உழைப்பு அபாரமானது!
உன் இயல்பு உன்னை வடிவமைக்கும்!
''விகடன் விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்க தியேட்டருக்குப் போற, தினமணி தலையங்கங்களைப்பத்தி விவாதிக்கிற மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவன். நாமக்கல்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவுக்கு பொதுஅறிவு ஆர்வம் ஜாஸ்தின்னா, அம்மாவுக்கு தமிழ் மொழியின் மீது காதல். ரெண்டு பேரும் பல விஷயங்களில் முரண்படுவாங்க. அந்த முரண் சுவைகளை ரசிச்சு வளர்ந்தேன். பள்ளியில் குமாரசாமின்னு ஒரு சார்தான் எனக்கு சரித்திரம், பூகோளம் பாடங்கள் எடுத்தார். வகுப்புக் குள் நுழைந்ததும் 'குப்தர்கள் காலம்'னு கரும்பலகையில் எழுதிட்டு, 'ராஜஸ்தான் முதல்வர் யார்?', 'கியூபாவின் அதிபர் யார்?'னு தினமும் சில பொதுஅறிவுக் கேள்விகளோடுதான் பாடங்களை ஆரம்பிப்பார். அவருக்காகவே பள்ளிப் பருவத்திலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. அந்தப் பழக்கம் கல்லூரிக்குள் கால் வைக்கும்முன்னரே தி.ஜா., சுந்தர ராமசாமி போன்றோர்களைப் பரிச்சயப்படுத்தியது. பொது அறிவு, தமிழ், இலக்கியம்னு என்னைச் சுத்தி அமைஞ்ச சூழலை கல்லூரிப் பருவம் வரை அபாரமாக் கிரகிச்சுக்கிட்டேன்!''
உன் தேவை, உனக்கு வழங்கப்படும்!
உன் வருத்தங்களை வரலாறு ஆக்கு!
''என் அப்பா ஒரு வணிகர். நான் கல்லூரியில் சேரும் காலத்தில் அவர் வியாபாரத்தில் கொஞ்சம் சிரமப்பட்ட காலம். கல்லூரிக் கட்டணங்களைச் செலுத்த கல்விக் கடனுக்காக வங்கியை அணுகினோம். மதிப்பெண் அல்லாத சில காரணங்களைச் சொல்லி மறுத்துவிட்டார்கள். அந்த வலி இன்னமும் உள்ளுக்குள் இருக்கிறது. காலங்கள் கடந்து நான் ஈரோடு மாவட்ட ஆட்சிப் பணியில் இருந்த நேரம். மனுநீதி நாள் அன்று தன் மகனுக்கு கல்விக் கடன் வழங்கக் கோரும் விண்ணப்பத் துடன் வந்த ஒரு தாய், என்னைப் பார்த்ததும் ஓடி வந்து, 'ஐயா! என் மகன் நல்லா படிப்பான். ஆனா, கல்விக் கடன் கொடுக்க மாட்டேங்குறாங்க. என் மகன் வாழ்க்கை இப்போ உங்க கையிலதான்யா இருக்கு'ன்னு என் கால்ல விழுந்துட்டாங்க. அதிர்ச்சியின் உச்சத்தில் அந்த அம்மா என் காலில் விழுவதைத் தடுக்கிறேன். அந்த சங்கடச் சூழ்நிலையிலும் அந்த மகனின் உணர்ச்சி களை நான் கவனித்தேன். 'நல்லாப் படிக்கத்தான் முடியும். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' என்ற இயலாமையிலும், தன் படிப்புக்காகத் தன் தாய் இன்னொருவன் காலில் விழுவதைக் காணச் சகிக்க முடியாத வேதனையிலும் கண்ணீர் மறைத்து முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொண்டான். மறுநாள் காலை அந்த மாணவனுக்கான கல்விக் கடனைப் பெற்றுக் கொடுத்தேன். அதன் பிறகு மாவட்டம் முழுக்கத் தொடர் முகாம்கள் நடத்தி, ஒரே வருடத்தில் 110 கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடன்களை வழங்கவைத்தோம். ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் எந்தத் துயரமும் அவன் தலைமுறையைத் தாண்டக் கூடாது. அதை மாற்றியமைப்பதற்கான முயற்சி களை ஒவ்வோர் இளைஞனும் அவனுடைய பொற்காலத் தில் சாதிக்க வேண்டும்!''

உன் கல்வி உன்னைக் கண்ணியமாக்க வேண்டும்!
''சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மானுடவியல்தான் (Anthropology) எனது விருப்பப் பாடம். விமர்சனப் பார்வைகொள்ளாமல் மனித மனங்களின் மென் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொடுப்பது மானுடவியல் பாடம். எந்தப் பெரிய செயலையும் சின்னச் சின்ன நடவடிக்கைகளாகப் பிரித்துக்கொண்டு வெற்றியைச் சாத்தியமாக்குவதுதான் இன்ஜினீயரிங் படிப்பின் அடிப்படைத் தத்துவம். மதுரையில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, 10 வருடங்களாக நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் உள்ளாட்சித் தேர்தல் களை வெற்றிகரமாக அரங்கேற்ற உதவியது எனது கல்வி கற்றுக்கொடுத்த அந்த இரண்டு குணங்கள்தான். தேர்தல்கள் நடத்துவதற்கு எதிர்ப்பினைப் பதிவுசெய்த தரப்பினர் சார்பாக என்னைச் சந்திக்க வந்தார் செல்லக்கண்ணு. அவரி டம் எந்த விதத்திலும் சமரசத்துக்குப் பணிந்துவிடக் கூடாது என்ற உறுதியான உடல்மொழி தொனித்தது. 'வாங்க செல்லக்கண்ணு... நல்லா இருக்கீங்களா? நாலு தலைமுறைக்குப் பிறகு உங்க வீட்ல பெண் குழந்தை பிறந்திருக்காம்... பாப்பா நல்லா இருக்கா?' என்று கேட்டேன். அதைக் கொஞ்சமும் எதிர்பாராதவர், அதை மறுக்க முடியாதவர்... முன்தீர்மானிக்கப்பட்ட தன் உடல் மொழியைத் தளர்த்திக் கொள்ள வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவரைச் சம்மதிக்கவைப்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் எழவில்லை. தொடர் நிகழ்வுகள் அந்தத் தேர்தல்களைச் சாத்தியப் படுத்தின. உணர்ந்து கற்ற கல்வி தினசரி வாழ்க்கையில் நம் கைபிடித்தே நடக்கும்!''
(இவர் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்ததமைக்கு பெருமை கொள்கிறோம்)
Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 6:45 PM 13 comments
Labels: ஈரோடு, உதயச்சந்திரன், பகிர்தல்
Artigos Relacionados:Friday, April 23, 2010
வேலை வாய்ப்பு....
வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்....
தற்போது நண்பர் பதிவர் சங்கமேஸ்வரன் (சங்கவி) அவர்கள் அலுவலகத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.
இதில் ஈரோடு, கோவையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை எனக்கூறி உள்ளார்கள். கீழ்கண்ட வேலைகளுக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தகுதியுள்ளவர்களாகவும் வேலை வாய்ப்பிற்கு காத்திருப்பவர்களாகவும் இருந்தால் அவர்களின் சுயவிபரக்குறிப்பினை (பயோடேட்டா) கீழ்கண்ட நண்பரின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்..
- sat10707@gmail.com
Top MNC Company in Coimbatore…
1. Software Engineer
2+ years of Web based development experience
(Asp.net, C#, MS SQL, JavaScript)
Experience with AJAX / ATLAS an advantage
Contact: karthikeyanp365@gmail.com
••••••••••••••
2. Process Associate (Voice) - Night Shift
Experience in a US outbound Call center
Excellent English Communication / Comprehension skills
Fresher can also apply
Contact: sat10707@gmail.com
Note: Please mention #567 as a reference ID in your resume.
நன்றி
Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 1:05 PM 4 comments
Labels: செய்தி, பகிர்வு, பதிவர் வட்டம், வேலை வாய்ப்பு
Artigos Relacionados:Wednesday, April 14, 2010
கோடியில் இருவர்...
சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.
கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன்.
குறிப்பு:
இவர்களுக்கான பாராட்டுவிழா நாளை (15.04.10) வியாழன் இரவு 8 மணிக்கு ஈரோடு சிவில் இன்ஞ்சினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங்கில் நடைபெறுகிறது. அது தொடர்பான அழைப்பு இடுகை இங்கே கோடியில் இருவர் - பாராட்டு விழா
Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 6:48 PM 9 comments
Labels: ஈரோடு, சமூகம், தியாகம், பசுமை, மரம் வளர்ப்பு
Artigos Relacionados:Tuesday, April 6, 2010
சிறுவனுக்கு உதவுங்கள்....
சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.
எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.
கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.
விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.
முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்
வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே
Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk
முகவரி :
P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt
தொலைப்பேசி எண்: 9791460680
நன்றி : http://umakathir.blogspot.com
Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 5:06 PM 8 comments
Labels: உதவி, சிறுவன், பகிர்தல், விபத்து...
Artigos Relacionados:

தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்