Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Saturday, December 26, 2009

சண்முகராஜ் அவர்களிடமிருந்து வந்த மின்மடல்...

அன்பின் நண்பர்களுக்கு,

பதிவர் சந்திப்பை கலக்கி விட்டீர்கள்......கடந்த ஒருவாரமாக அனைவரும் இதை பற்றிதான் பேச்சாக இருக்கிறது...இதுவரை நடந்த சந்திப்புகளிலேயே ஈரோடு சந்திப்பு தான், வந்தவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவும், வராதவர்களுக்கு பெரும் ஏக்கத்தையும் கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

உங்களின் ஏற்பாடுகள் அனைத்தும், அனைவருக்கும் ஒரு முன்னுதாரமாக அமைந்திருக்கிறது....

உண்மையில் நமது ஈரோடு பதிவர் சந்திப்பு ஒரு குடும்ப விழாபோல, நண்பர்கள் விழா போல சிறப்பாக நடந்தமையையும், கலந்து கொண்டவர்களின் பதிவில் இதை குறிப்பிட்டுள்ளமையும் கண்டு நானும் ஈரோட்டுகாரன், எங்க ஊரில் நடந்த சந்திப்பு என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைய வைத்துவிட்டீர்கள்.

கடந்த சில நாட்களாகவே இதைப்பற்றி கடிதம் எழுத வேண்டும் முயற்சி செய்தேன், ஆனால் கடும் வேலை பளுவின் காரணமாக முடியவில்லை. (Here, the main Market season is Christmas and New Year only)

இந்த இயந்திர உலகத்தில், மனிதனை மனிதன் மதிக்காத உலகத்தில், சொந்த வேலைகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு....பொதுநலன் பற்றியும் கொஞ்சம் சிந்தித்து, அதற்காக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், உடல் உழைப்பையும், நேரத்தையும், பொருளையும் செலவு செய்த உங்களுக்கும் உங்களுக்கு உதவியாக இருந்த நமது ஈரோடு வாழ் நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன், ,

என்னையும் இதில் சிறு பங்களிப்பு செய்ய அனுமதி அளித்தமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்

உங்கள் சமூக பணி தொடர என்றும் துணைவர தயாராக இருக்கிறேன்,

மீண்டும் நன்றிகள் பல

அன்புடன்,
ந. சண்முகராஜ்
( Togo- West Africa - 00228- 9363900 and 00228 - 9909333)

குறிப்பு: 20.12.2009 ஞாயிறு அன்று நடந்த ‘ஈரோடு பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்தின்’ பங்களிப்பாளராகவும், அந்நிகழ்ச்சியினை முழுவதும் வீடியோ கவரேஜ் செய்ய செலவுகளை ஏற்றவருமான அன்பர் ந.சண்முகராஜ் அனுப்பிய மின் மடல் இது. அந்த காணொளித்தொகுப்பும் வந்துவிட்டது, விரைவில் வலையேற்றம் செய்யப்படும்.

................ ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக க. பாலாசி.


Wednesday, December 23, 2009

நண்பர்களுக்கு சமர்பிக்கிறோம்.

அன்புசால் நண்பர்களே...

எங்கள் ஈரோடு தமிழ் வலைப் பதிவர்கள் குழுமத்தால் நடத்தப்பட்ட சங்கமம் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்ததாக சுமார் முப்பது பதிவர்கள் தானாக முன்வந்து பல இடுகைகள் இட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

இந்த நிகழ்வின் வெற்றிக்குப் பின்னால் பல பதிவர்களின் உழைப்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை. ஆரம்பம் முதல் நடத்தலாம் என்ற நம்பிக்கை கொடுத்தோடு, எந்த ஒரு கணத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் சிறிதும் நம்பிக்கையை சிதைக்காமலும், ஊக்கத்தைக் கைவிடாமலும் தொடர்ந்து பல வகைகளில் ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்து பதிவர்களுமே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள்...

தானாக முன்வந்து நிதியளித்த சண்முகராஜன், பீம்பாய், தாமோதர் சந்துரு, அப்பன், பட்டிக்காட்டான், லவ்டேல் மேடி, முருக.கவி, நிதியளித்ததோடு சிறிதும் முகம் சுளிக்காமல் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட பாலாசி, கார்த்திக், நந்து, வால்பையன், அகல்விளக்கு, கோடீஸ்வரன், வசந்த்குமார், வாசகர்கள் ஜாபர், பைஜு, பரணி இவர்கள்தான் இந்த நிகழ்வின் வெற்றிக்கு மிக மிக முக்கியக் காரணம். அதே சமயம் ஒருவர் தலைமையேற்று நடத்த வேண்டும், மற்றொருவர் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதால் மட்டுமே நாங்கள் இருவரும் முன்னால் நிற்கவேண்டியதாக இருந்தது.

பதிவுல நண்பர்கள் நிகழ்வு பற்றி எழுதும் பொழுது அளித்த பாராட்டை எங்களோடு பாடுபட்டு, உதவிய அனைத்து ஈரோடு நண்பர்களுக்கும் சமர்பிக்கிறோம்.

இப்படிக்கு
ஈரோடு கதிர், ஆரூரன்

(பதிவர்கள் ஈரோடு கதிர், ஆரூரன் சார்பாக இடப்பட்ட இடுகை)

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO