Wednesday, May 4, 2011

ஈரோட்டில் நாளை பந்த்

மின்சாரம் தடையில்லாமல் வழங்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் தடையுன் அறிவிக்கப்படாத மின் தடையும் இருந்து வருகிறது. அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பல தொழில்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

மின்தடை ஏற்படுவதால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலையற்ற நிலையும் ஏற்படுகிறது. ஆனால் அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட (ஈடிசியா) மற்றும், ஜவுளி மற்றும் ரெடிமேடு ஏற்றுமதி, சைசிங், பிராசசிங், டையிங், டயர் ரீடிரேடிங், தமிழக விவசாயிகள் சங்கம், உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

சென்னிமலையில் அனைத்து தொழில் வணிக அமைப்புகள், விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில், சென்னிமலையில் நாளை (வியாழக்கிழமை) பொதுவேலை நிறுத்தம் நடக்கிறது.

நன்றி : ஈரோடு லைவ்

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO