Tuesday, December 28, 2010

சங்கமம் 2010 - வரவு செலவு

சங்கமம் 2010 நிகழ்ச்சிக்காக
குழுமத்தைச் சார்ந்த 22 பேர் நிதியளித்திருந்தனர்.

முந்தைய ஆண்டு கையிருப்பு ரூ. 167

இந்த ஆண்டு வசூல் தொகை ரூ.40400.

மொத்த வசூல் தொகை ரூ. 40567
________________________________

செலவு வகைகள்:

அரங்கு, மின் செலவு - ரூ.4190
இலை - ரூ.300
நினைவுப்பரிசு - ரூ.2100
பதாகை - ரூ.630
அட்டை, எழுதுகோல் ரூ.850
மளிகைப் பொருள், காய்கறி - ரூ. 6986
LCD - ரூ.1000
சமையல் காரர் - மாவு - ரூ.4500
இனிப்பு - ரூ.140
பாத்திரங்கள் வாடகை - ரூ.1000
கறி வகைகள் - ரூ.8650
எரிவாயு - ரூ.2320
அரங்கு காவலாளி - ரூ.200
பால் தயிர் ரூ.580
அறை வாடகை ரூ.2600
பயணச்சீட்டு, வாகனம் - ரூ.4095
தண்ணீர் - ரூ.370

மொத்த செலவு ரூ.40511
________________________________

மீதி கையிருப்பு ரூ.56


-------------------------------------

பதிவர்கள் ஆரூரன் விசுவநாதன், பதிவர் பழமைபேசி ஆகியோர் தங்கள் “ஊர்ப்பழமை” புத்தகத்தை பங்கேற்பளர்களுக்கான நினைவுப் பரிசு அளிக்க குழுமத்திற்கு அன்பளிப்பாக அளித்து விட்டனர்.

ஒளிப்பதிவை இந்த ஆண்டும் நண்பர் சண்முகராஜன் அவர்கள் தன் நண்பர் கென்னடி மூலம் அன்பளிப்பாக செய்து அளித்துவிட்டார்.

நிழற்படங்கள் உதவி : கூழாங்கற்கள்.காம், சக பதிவர்கள்.

கூடுதல் வாகன உதவி : விஸ்வம் TVS

_________________________

அனைவருக்கும் நன்றி

- J.கார்த்திக்
பொருளாளர்

Monday, December 27, 2010

சங்கமத்தில் கலந்து கொண்ட பதிவர்கள் பட்டியல்

அனைவருக்கும் வணக்கம்,

வலைப்பதிவர்கள் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் அடுத்தக்கட்ட நகர்த்தலாகவும் நேற்றைய சங்கமம்‘10 நிகழ்ச்சியினையும் சொல்லலாம்.

ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளின் மணநாளில் கொள்ளும் கடமையுணர்ச்சியும், பரிதவிப்பும், பரபரப்பும் எங்களுக்குள் இருந்ததென்றே சொல்லவேண்டும். அனைத்து நண்பர்களையும் கைகோர்க்கவைத்து அழகு பார்க்கவேண்டும் என்ற ஆவல் மற்றும் இந்த நிகழ்வை சிறப்புற நடத்தவேண்டும் என்று ஈரோடு பதிவர்கள் கொண்டிருந்த சிரத்தையும் ஒற்றுமையுணர்வும் மட்டுமே நேற்றைய நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தியது என்றுசொன்னால் மிகையாகாது.

எங்கோ எதுவோ நடக்கிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தில் கலந்துகொண்ட அனைத்துப்பதிவர்கள், குறிப்பாக பெண்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியினை எத்தனைமுறை சொன்னாலும் தகும்.

சங்கமம்‘2010 வருகை பதிவேட்டில் பதிந்துள்ள நபர்கள்

1. நா. ஸ்ரீதர் (sridharrangaraj.blogspot.com)
2. மா.கார்த்திகைப்பாண்டியன் (ponniyinselvan-mkp.blogspot.com)
3. டாக்டர்.பி. கந்தசாமி (sawmysmusings.blogspot.com
4. என்.எஸ். விஸ்வநாதன்
5. அ. ஷர்புதின் (rasekan.blogspot.com
6. கா.சிதம்பரம் (சீனா) (cheenakay.blogspot.com)
7. செல்வி ஷங்கர் (pattarivumpaadamum.blogspot.com)
8. மோ. அருண் (tamizhstudio.com)
9. இரா. பிரபாகர் (prabhagar.com)
10. ஜாக்கி சேகர் (jackiesekar.com)
11. Pro. பெர்ணான்டோ
12. சீ. சங்கமேஸ்வரன் (sangkavi.blogspot.com)
13. பி. கதிர்வேலு (erodekathir.com)
14. ஆரூரன் விசுவநாதன் (arurs.blogspot.com)
15. தாமோதர் சந்துரு (chandruerode.blogspot.com)
16. த. பாலாஜி
17. ஜெ. கார்த்திக் (mpguys.blogspot.com)
18. ஜி.கணபதி (insightganapathi.blogspot.com)
19. ஜி.வேலாயுதம் (tamilsowmiya.blogspot.com)
20. சு. பழனிச்சாமி (tharapurathaan.blogspot.com)
21. கருவாயன் (எ) சுரேஷ்பாபு (photography-in-tamil.blogspot.com)
சிறப்பு அழைப்பாளர்
22. இரா. வசந்தகுமார் (kaalapayani.blogspot.com)
23. கு. மகுடீஸ்வரன்
24. க. பாலாசி (balasee.blogspot.com)
25. ஓசை செல்லா (osaichella.blogspot.com) சிறப்பு அழைப்பாளர்
26. பி. வின்சென்ட் (maravalam.blogspot.com
27. J. ராஜாஜெய்சிங் (agalvilakku.blogspot.com)
28. ஆர்.வி. சரவணன் (kudanthaiyur.blogspot.com)
29. கோபிநாத். A.P. (nandrivanakkamm
30. D. சரவணன் (srrnnec.blogspot.com)
31. செந்தில்குமார் (வாசகர்)
32. கிருஷ்ணகுமார் (parisalkaran.com)
33. வெயிலான் (veyilaan.com)
34. மா. செல்வம் (kadalaiyur.blogspot.com)
35. க. மகேஷ்குமார் (வாசகர்)
36. பி. கிருஷ்ணமூர்த்தி (krishnamoorthi-pk.blogspot.com)
37. பி. வேல்முருகன் (prasanthvel.co.cc)
38. என். சௌந்தர் (வாசகர்)
39. அமிர்தராஜ் (thappattai.blogspot.com)
40. ஷம்மி முத்துவேல் (shammisviews.blogspot.com)
41. ஆர். விஜயராகவன் (வாசகர்)
42. கே. ஷயத் முஸ்தபா (speedsays.blogspot.com)
43. Dr. ஏ. சின்னதுரை (tamilchinna.blogspot.com)
44. என். அருண்ராஜ் (valpaiyan.blogspot.com)
45. மோனி (monycoimbatore@worpress.com)
46. என். தர்மன் (வாசகர்)
47. N. நந்தகுமார் (angelnila.blogspot.com)
48. சு. சிவக்குமார் (sivaaa82.blogspot.com)
49. பாமரன் (சிறப்பு அழைப்பாளர்)
50. சிதம்பரம்.கி (சிறப்பு அழைப்பாளர்)
51. பெருமாள் முருகன் (perumalmurugan.blogspot.com) (சிறப்பு அழைப்பாளர்)
52. இராவணன் (iruppu.blogspot.com)
53. டி. குமரேசன் (juniorsamurai.blogspot.com)
54. ஆர். மோகன்தாஸ் (mdrpakkangal.blogspot.com)
55. வி.என். தங்கமணி (vnthangamani.blogspot.com)
56. ரவி உதயன் (raviuthan.blogspot.com)
57. வி. பழனி (வாசகர்)
58. பா. வினோத் (koozhankarkal.com) சிறப்பு அழைப்பாளர்
59. ஜெ. மனோகரன் (வாசகர்)
60. ந. பாலாஜி (வாசகர்)
61. என். கணேசமூர்த்தி (gans69.blogspot.com)
62. M.K. செந்தில் (வாசகர்)
63. வி.து. மனோதீபன்
64. கால சும்ரமணியம்
65. D. சரவணன்
66. T.V. புகழேந்தி
67. அடலேறு (adaleru.wordpress.com)
68. கும்கி (kumky.blogspot.com)
69. M.S. எழிலரசன்
70. ஆர். கலைவாணி
71. கோ. அன்பு
72. ப. செல்வக்குமார் (koomaali.blogspot.com)
73. அ. மாதேஷ்வரன் (madydreamz.blogspot.com)
74. L. தயாளன்
75. ஆர். லிவிங்ஸ்டன்
76. ஆர். ரமேஷ்குமார்
77. பி. முரளிகுமார் பத்மநாதன் (eniyoruvidhiseyvom.blogspot.com)
78. க.இரா. செந்தில்நாதன் (emperorever.com)
79. A.K. சாமிநாதன் (poonthalir.com)
80. செ. இராசசேகரன் (நண்டு @ நொரண்டு)
81. விஜி ராம் (மயில்)
82. தாரணிப்ரியா
83. தமிழ்ச்செல்வி (veetupura.blogspot.com)
84. K. ஜெயகுமார்
85. வெ. அருணாசலம்
86. செ. கலைவாணன் (eerode.blogspot.com)
87. ஆர். கோபி (ramamoorthygopi.blogspot.com)


(
குறிப்பு: மேலே குறிப்பிட்ட நபர்கள் எங்களது வருகைப்பதிவேட்டில் தங்களது வருகையை பதிந்துள்ளவர்கள், மேலும் பதிவேட்டில் பதியாமல் கலந்துகொண்ட இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்களும் வாசகர்களும் இருக்கிறார்கள். மேலும் இங்கே பலரின் வலைப்பூ முகவரி காட்டப்பட்டுள்ளது. இன்னும் பலபேர் வாசகர்களாகவே கலந்துகொண்டார்கள், அவர்களின் வலை முகவரிகள் இல்லை.)




..

Tuesday, December 21, 2010

சங்கமம்‘2010 நிகழ்ச்சி நிரல்

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.





வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.





பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ்
வணக்கம்
*வரவேற்புரை

*பதிவர்கள்
அறிமுகம்
*கூட்ட
துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
சிறுகதைகளை உருவாக்குவோம்
எழுத்தாளர். பெருமாள் முருகன்
உலக
மொக்கையர்களே ஒன்று படுங்கள்
எழுத்தாளர். பாமரன்
குறும்படம்
எடுக்கலாம் வாங்க
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
நிழற்படங்களில்
நேர்த்தி
கருவாயன்’ - சுரேஷ்பாபு
உலகத்திரைப்படங்கள்
ஒரு பார்வை
சிதம்பரன்.கி

மதியம் 01-30 – 02.30 மதிய உணவு


இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
இன்றைய இணையமும் வலைப்பூக்களும்
ஓசை செல்லா
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)

மூன்றாம் அமர்வு:
(மாலை 03.30 மணி)
பதிவர்கள் கலந்துரையாடல்
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை

மாலை
05.00 மணி நிகழ்ச்சி நிறைவு



குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.

நிகழ்ச்சியை நடத்துவது மட்டும்தான் நாங்கள்…. இது நமக்கானதொரு பொதுக்கூடல்… இதன் வெற்றி முழுக்கமுழுக்க உங்களின் பங்கேற்பில் மட்டுமே! உங்கள் வருகை மட்டுமே இப்போதை அவசரமான அவசியம்! இது வரை பயண ஏற்பாடு செய்யாதவர்கள் கூட இப்போது நினைத்தாலும் திட்டமிட்டு ஈரோட்டிற்குப் பயணப்பட முடியும்..

உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம், நம்பிக்கைதானே எல்லாவற்றையும் நடத்திச்செல்கிறது.


.

Tuesday, December 14, 2010

சங்கமம்‘2009 பற்றி பதிவர் வானம்பாடிகள்

பிரமாதம். அசத்தல். சாதிச்சிட்டீங்க என்பது போன்ற வார்த்தைகளைத் தனியாகச் சொன்னாலும் மொத்தமாகச் சொன்னாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்று சொல்லிவிடலாம்.

ஆனால், முதன் முறையாக ஒரு பதிவர் கூடலை மிக அழகான ஓர் மாலைப் பொழுதில் மிக மிக அருமையாக நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர்களைப் பாராட்ட வார்த்தைகளைச் செதுக்குவதைவிட பட்டென்று மனதில் தோன்றுவதை சொல்லுவது தவிர வேறு வழியில்லை.

கூட்டுமுயற்சி, பங்கேற்பு, பங்களிப்பு, நிர்வகித்தல், விருந்தோம்பல் இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் எடுத்துக் காட்டாக இந்த நிகழ்ச்சி இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. சந்திப்பின் முத்திரைச் சின்னத்தில் மோட்டோ எனும் முது மொழியாக 'அட நீங்கதானா" எனப் போட்டிருக்கலாம் போல்.


பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் நேசக்கரம் குலுக்கி கேட்ட முதல் கேள்வி இது. கிட்டத் தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட பதிவர்களும் வாசகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சந்தேகமற நிரூபணமானது வாக்குகளையும் பின்னூட்டங்களையும் தாண்டி, நீங்கள் எல்லோராலும் படிக்கப்படுகிறீர்கள் என்பது. ஒரு பதிவருக்கு, இதைவிட ஊக்கமோ, தன்னம்பிக்கையோ வேறெப்படி தரவியலும்.

ஈரோடு பதிவர் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் மறைமுகமான இந்தத் தலைப்பு இருந்திருக்கிறது. இதற்காக நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், மற்ற பதிவர்கள் சார்பிலும் என் நன்றி.

சுவையான தேநீருக்குப் பின், சரியாக 4 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, திரு. கதிர் அழைக்க திரு ஆரூரன் வரவேற்பு உரையாற்றினார். பதிவு என்பதின் முக்கியத்தை கலிங்கன் காளிங்கனாகவும் கம்ப நாடன் கம்ப நாடாராகவும் திரிந்ததை நகைச்சுவையோடு கூறிடினும், பதிவின் அவசியத்தை, பொறுப்புணர்ச்சியை உணர்த்தியது பாராட்டத் தக்கது.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி(நானு நானு), அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் துவக்கப் பட்டது.

கலந்துரையாடல் நேரம் நிகழ்ச்சியின் மகுடம் எனலாம். இதனை நிர்வகிக்க லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோர் குழு பொறுப்பேற்க அனானிகள் குறித்த விவாதம் சூடு பிடித்தது எதிர்பாராத சுவாரசியம். அவ்வப்போது தோழமையான, நகைச்சுவையான மட்டறுப்புகளுடன், வெகு சிறப்பாக அமைந்துவிட்டது.





விழா முடிந்ததும், செவிக்குணவில்லாத காரணத்தால், சிறிதன்றி பெரிதாகவே கொங்குநாட்டின் விருந்தோம்பல் அழைத்தது. சுவையான உணவு வாழைமட்டை(பாக்கு?) தட்டிலும், அளவான வாழையிலையில் பரிமாரப் பட்டமையில் கூட அமைப்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்பட்டது.

விளக்கமாக எழுத எண்ணியிருப்பதாலும், கூடியவரை உரைகளை ஒலிப்பதிவில் தர எண்ணியிருப்பதாலும், சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சின்ன சுயதம்பட்டத்தோடு நெஞ்சுகொள்ளா நன்றியோடு முடிக்கிறேன்.

இந்த என் 300வது இடுகையை, ஒரு மிகச் சிறந்த பதிவர் சங்கமத்தின் நிகழ்வுகளைத் தாங்கி வருவதோடு, என்னை குறைந்தது எழுபது சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும், அவர்களை எனக்கும் நேரடியாக சந்திக்க வாய்ப்பளித்த திரு கதிர், திரு ஆரூரன், பாலாஜி, வால்பையன் மற்றும் இதர ஒருங்கிணைப்பாளர்களுக்கும், என் எழுத்தை வாசிக்கும் இதர அன்பர்களுக்கும் என் நன்றியைப் பகிர வழிவகுத்த ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.


நன்றி வானம்பாடிகள்



இந்த வருடம் சங்கமம்‘2010



.

Monday, December 13, 2010

சங்கமம்‘2009 பற்றி பதிவர் பழமைபேசி


வணக்கம் மக்களே, வணக்கம்! ஈரோடு வலைஞர்களும், பதிவர்களும், வாசகர்களுமாய்ச் சேர்ந்து ஒரு முன்னுதாரணத்தை உண்டு செய்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். குறித்த நேரத்திற்கு தேநீர் மற்றும் கொங்கு நாட்டிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் துவங்கியது ஆரவாரம்.

பின்னர், விழா தொகுப்பாளர் கதிர்‍‍‍‍‍ ஈரோடு அவர்கள் நிகழ்ச்சியை தமிழ் வணக்கமுடன் முன்னுரைக்க, ஆருரன் விசுவநாதன் அவர்கள் தொகுத்தளிக்கப் பணிக்கப்பட்டார்.

பின்னர் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு வாழ்த்துரைக்க வந்த விருந்தினர்கள் எனப் பலரும் சிறப்பாகப் பேசினர். கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்றனர்.

சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமம் மற்றும் தமிழ்மணம் திரட்டிக்குத் தமிழ்ச்சமுதாயம் மிகவும் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது!

நன்றி பழமைபேசி






.

Friday, December 10, 2010

பதிவர்கள் சங்கமம்’2009 காணொளிகள்






வரவேற்புரை

அறிமுகம் செய்துக்கிறாங்க மக்கள்!

எண்ணங்களைப் பகிர்தல்ங்க... இஃகி!

(இது செம சூடு மச்சி)

நன்றியுரை


காணொளிகளை தரவிறக்கம் செய்து பார்க்க

http://www.blogger.com/video-play.mp4?contentId=25e495ced2a9164c&type=video%2Fmp4

http://www.blogger.com/video-play.mp4?contentId=6b85d937a67c21fb&type=video%2Fmp4

http://www.blogger.com/video-play.mp4?contentId=d9474c7a8eb8d9ed&type=video%2Fmp4

http://www.blogger.com/video-play.mp4?contentId=e5e041b37200880f&type=video%2Fmp4

http://www.blogger.com/video-play.mp4?contentId=feb546927dadc485&type=video%2Fmp4






Thursday, December 9, 2010

26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...(சங்கவி)

பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்..

கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...



பதிவர் சந்திப்பு வருகிற 26.12.2010 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.

நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...

பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க பழகலாம்...

என்று பழகுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426


நன்றி சங்கவி


.

Wednesday, December 8, 2010

சங்கமம் - 2010




டிசம்பர் மாதம்.. கொண்டாட்டங்களின் மாதம்... பலப்பல பண்டிகைகள்,பல விடுமுறை நாட்கள்,வரப்போகும் புதிய வருடத்தினை வரவேற்கும் குறுகுறுப்பு இவையெல்லாம் அடங்கிய டிசம்பரின் மற்றுமொரு மனதில் நிற்கும் நிகழ்வு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்‍‍ 2010.


அத்தகையதொரு மகிழ்வான தருணத்தில் மனம் மகிழ ஈரோடு வலைப்பதிவர் குழுமம் அன்புடன் அழைக்கிறது.உங்கள் வருகைக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.


நாள் :26/12/2010
நேரம்: காலை 11.00 மணி

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள‌



கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கமேஸ் - 9842910707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426


erodetamizh@gmail.com


நன்றி இய‌ற்கை ம‌க‌ள்

Tuesday, December 7, 2010

சங்கமம் 2010 – வாங்க! வாங்க!!

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்
இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.

வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.




பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ்
வணக்கம்
*வரவேற்புரை

*பதிவர்கள்
அறிமுகம்
*கூட்ட
துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் -
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக
மொக்கையர்களே ஒன்று படுங்கள் -
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம்
எடுக்கலாம் வாங்க -
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில்
நேர்த்தி -
கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள்
ஒரு பார்வை -
சிதம்பரன்.கி

மதியம்
01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -
ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல் -
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை

மாலை
05.00 மணி நிகழ்ச்சி நிறைவு

குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

சங்கமம் 2010 குறித்து பதிவர்கள்
தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...
உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...

___________________


Monday, December 6, 2010

குழும உறுப்பினர்கள் - அறிவிப்பு

இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நமது ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற ஆண்டு பதிவர்கள் வாசகர்கள் கலந்து கொண்ட சங்கமம் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியதை அறிந்திருப்பீர்கள் .

இந்த ஆண்டும் வருகின்ற டிசம்பர்-26ம் தேதி ஈரோ
ட்டில் சங்கமம்-2010 நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திட திட்டமிட்டு வருகிறோம்.


ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பதிவர்கள், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்து வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பதிவர்கள் தங்களை ஈரோடு தமிழ் வலைப்பதிர்வகள் குழுமத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

குழும உறுப்பினர்களிடையேயான தகவல், கருத்து பரிமாற்றங்களுக்காக ”ஈரோடு தமிழ்” என்ற மின் மடல் குழுமம் இயங்கிவருகிறது.

இது வரை தங்கள் வலைப்பக்கத்தை, மின்னஞ்சல் முகவரியை குழுமத்தில், இணைக்காத பதிவர்கள் erodetamizh@gmail.com என்ற மின்மடல் முகவரிக்கு தங்கள் வலைப்பூவின் முகவரி , மின்னஞ்சல் முகவரி மற்றும் தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டுகிறோம்.

முக்கியமாக,
நிகழ்ச்சி குறித்து தங்கள் வலைப்பக்கங்களில் எழுத அன்போடு வேண்டுகிறோம், நட்பில் இருக்கும் பதிவர்களோடு தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு அவர்களின் வருகையை உறுதிப்படுத்திடவும் வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஆரம்பித்து, மாலை 5 மணி அளவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாலை 6 .00 மணிக்கு வலைப்பக்கம் எழுதுவது குறித்த பதிவர்கள் அல்லாதோருக்கு, வலைப்பக்கம் துவங்குவது குறித்த பயிற்சி வகுப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம், நிகழ்ச்சி நிரல் மற்றும் அனைத்து விபரங்களும் அடுத்த சில நாட்களில் தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட உங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாடுகிறோம்!

நன்றி

அன்புடன்
க.பாலாசி
செயலர்

Sunday, December 5, 2010

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும அறிவிப்பு

அன்பு நண்பர்களே,

இன்று காலை நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர்கள் குழும சந்திப்பு கூட்டத்தில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் தலைவராக ஈரோடு கதிர் (9865390054) அவர்களும், செயலராக க.பாலாசி (9003705598) அவர்களும், பொருளாளராக ஈரோடு கார்த்திக் (9788133555) அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இவர்களின் பணிசிறக்க வாழ்த்துகிறோம்.

அன்புடன்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்.
ஈரோடு.

Friday, December 3, 2010

சங்கமம் 2010 ஆலோசனைக் கூட்டம் - அறிவிப்பு

இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக ”சங்கமம்-2010” நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு குழும உறுப்பினர்களையும், ஈரோடு மாவட்டம் சார்ந்த பதிவர்களையும் அன்போடு அழைக்கின்றோம்

நாள் :
05.12.2010 ஞாயிறு

நேரம் :
காலை 10.30 மணி

இடம் :
சிகரம்,
226 SKC சாலை,
சூரம்பட்டி நால்ரோடு,
ஈரோடு.

மேலும் விபரங்களுக்கு:
க. பாலாசி 90037-05598
கதிர் 98653 -90054
ஆரூரன் 98947-17185


அன்புடன்
ஆரூரன்

Thursday, October 14, 2010

வாய் இறுகல் நோய்

நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள் அதன் இலகு தன்மையை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது கடினமாகும், இந்நிலையே வாய் இறுகு நோய்.



அறிகுறிகள்:
வாயின் சதைகளில் ரத்தஓட்டம் குறைந்து சதை வெளிறி காணப்படுதல், எரிச்சல், வாய் உலர்ந்து போதல், சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள். சில நேரங்களில் குரல் மாற்றம், கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம். பொதுவாக நான்கு விரல்கட்டை அளவு திறக்கும் வாய், இரண்டு விரல்கட்டை அளவுக்கும் குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்.

காரணிகள் :
பொதுவாக பான்பராக், பாக்கு, புகையிலை, அதிகமான காரம் பயன்படுத்துவோர், வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.



பாக்கு, தம்பாக்கு, புகையிலை, அதிக காரம் போன்றவற்றை தவிர்த்தல், இரும்பு சத்து, வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல், அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும்.

துவக்க நிலையில் பான்பராக், பாக்கு போடுவதை நிறுத்துதல், காபி, டீ, ஆல்கஹோல் தவிர்த்தல், மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும். முற்றிய நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும், அறுவை சிகிச்சையும் தற்சமயம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ஸ்டெம் செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.

நன்றி பல் மருத்துவர் ரோகிணிசிவா.


.

Friday, October 1, 2010

திருப்பூர் முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பதிவர்கள்

Monday, September 27, 2010

கொடுப்போம் அமுதம்!


சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த சேலம் கோட்ட அரசுப் பேருந்து ஒன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி மாவட்டம்,​​ முசிறியை அடுத்த உமையாள்புரம் என்ற கிராமப் பகுதியில் திடீரென சாலையோரம் நின்றது.

பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துநர்,​​ சாலையோரத்தில் ஓலை வேய்ந்த மண் குடிசையின் முன்னால் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியிடம் பெரிய ரொட்டி பாக்கெட்டையும்,​​ குடிநீர் பாட்டிலையும் கொடுத்துவிட்டு,​​ ஒரு வினாடி நலம் விசாரித்து விட்டு பேருந்துக்குத் திரும்பினார்.

அந்த மூதாட்டி நடத்துநருக்குத் தெரிந்தவராக இருப்பார் என்று நினைத்தோம்.​ விசாரித்து வைப்போமே என்று நடத்துநரிடம் பேச்சு கொடுத்த போதுதான் சுவாரஸ்யம் மிக்க செய்தி ஒன்று கிடைத்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம்,​​ காவிரிப்பட்டினம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் நடத்துநர் கே.​ சிங்காரவேலுக்கும் அந்த மூதாட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பிறகு எந்த நோக்கத்தோடு அந்த மூதாட்டிக்கு ரொட்டி,​​ குடிநீர் பாட்டில் வாங்கிக் கொடுத்தீர்கள் என்று நடத்துநரிடம் கேட்டோம். சில வினாடிகள் நீங்கள் யார் என்பது போல பார்த்துவிட்டுப் பிறகு எதுவும் கேட்காதவராக அவர் சொன்னது...

'பொதுவாக ஆதரவற்ற,​​ அடையாளம் தெரியாத வயதானவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

இந்த மூதாட்டி யார் என்று எனக்குத் தெரியாது.​ கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நான் பணியில் இருக்கும் போது,​​ இந்த மூதாட்டிக்கு எனது வீட்டில் இருந்து உணவும்,​​ கடையிலிருந்து குடிநீர் பாட்டிலும் வாங்கி வந்து தருகிறேன்.​ உணவு கொண்டு வர முடியாத சூழ்நிலையில்,​​ பெரிய ரொட்டி பாக்கெட்டும்,​​ குடிநீரும் வாங்கித் தருகிறேன்.

திருவண்ணாமலை வழித்தடத்தில் பணியாற்றிய போது,​​ ரமண மகரிஷி ஆசிரமப் பகுதியில் சாலையோர முதியோருக்கு நாள்தோறும் 5 பேருக்கு தயிர் சாதம் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.​ நான் இவ்வாறு உணவை வாங்கி இலவசமாகக் கொடுப்பதை அறிந்த அந்த உணவு விடுதிக்காரர் மேலும் 5 பொட்டலங்களை இலவசமாகக் கொடுத்தார்.

தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது பலனை எதிர்பார்ப்பது போல என்பதால்,​​ தெரியாத வயதானவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.​ இதேபோல,​​ நான் வசிக்கும் பகுதியில் உள்ள கூர்கா வீட்டு குழந்தைகளுக்கு சீருடை வாங்கிக் கொடுத்தேன்.​ அதோடு,​​ அவர்களது படிப்பிற்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

எனக்கு 54 வயதாகிறது.​ ஆனால்,​​ எந்த நோயும் இல்லாமல்,​​ முழு ஆரோக்கியத்துடன் உள்ளேன்.​ எனது மகன்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்று வருகின்றனர்.

நாள்தோறும் அடையாளம் தெரியாத வயதான ஒருவருக்கு உதவுவதன் மூலம் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.​ ​நாம் ஒவ்வொருவரும் நமது பெற்றோரைப் போல உள்ள வயதான,​​ ஆதரவற்ற ஒருவருக்கு சேவை செய்வதைக் கடமையாக நினைக்க வேண்டும்'' என்றார் அவர்.

அந்த மூதாட்டியை சென்று பார்த்தோம். மழையில் பாதி கரைந்திருந்த மண் சுவரின் மீது கீற்றுகளால் வேயப்பட்ட ஒரு குடிசையில் குறுக்கி,​​ முடக்கிப் படுத்திருந்தார்.சாலையின் எதிர்புறம் இருந்த வீட்டில் விசாரித்த போது,​​ அந்த மூதாட்டிக்கு திருமணமான ஒரு மகள் மட்டுமே இருக்கிறார்.​ அவரும் வெளியூரில் உள்ள நிலையில்,​​ அவரது உறவினரான நாங்கள் முடிந்தவரை அவரைக் கவனித்துக் கொள்கிறோம் என்றனர்.

ஆதரவற்ற வயதானவர்களுக்கு அரசு தரும் உதவிகளை பெற்றுக்கொண்டு,​​ தனிக் குடிசையில் தைரியமாகத்தான் வாழ்ந்து வருகிறார் இந்த மூதாட்டி. ஒரு ரூபாய் அரிசியையும்,​​ ஆதரவாகப் பேச ஒருவரையும் தேடி அலையும் அந்தக் கண்களுக்கு,​​ ஒரு ரொட்டி பாக்கெட்டும்,ஒரு வினாடி நல விசாரிப்பும் ஆறுதலான அமுதமாகத்தானே இருக்கும்!


நன்றி
தினமணி கதிர் (இரா.மகாதேவன்)



Saturday, August 28, 2010

வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை...

தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)


View Larger Map

புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி சிறப்படைய ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

Friday, August 20, 2010

மெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா



வலையுலக நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் எழுதிவருபவரும், தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவருமான திரு.இரா.செல்வராசு அவர்கள் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆகஸ்ட் 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே.


நாள்:
26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி

இடம்:
சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.

வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி

பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி

Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்

Futures & Options - Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.



Monday, August 9, 2010

வலைப்பதிவு துவங்குதல் - கருத்தரங்குகள்

அழகிய தருணங்கள், ஒரு கவிதையாய், சாரல் மழைத்துளியின் சிணுங்கலாய், மிக எளிதாய்க் கைகூடும் என்பது மற்றுமொருமுறை நிரூபணமாகியிருக்கிறது. என்னையும் இத்தனை நண்பர்களையும் இணைத்து வைத்த வலைப்பக்கத்தை நம்மையொத்த மனிதர்களிடம் திணிப்போம் அல்லது ஊட்டுவோம் என்பது நீண்ட கால ஆசை…












அப்படிப்பட்ட அற்புத தருணம் இன்று கைகூடியது. நண்பர் பதிவர் பழமைபேசியின் ஈரோடு வருகையை வித்தியாசமாக அமைக்க விரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இரு வேறு பொறியியற் கல்லூரிகளில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்களிடம் தனித்தனியே பேசும் போது, தங்கள் கல்லூரியில் எதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நண்பர் பழமைபேசியிடம் இசைவு பெற்றுத் தர இயலுமா என வினவ, நான் வலைப்பதிவுகள் குறித்து உங்கள் மாணவர்களிடம் அவரை வைத்து ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என்று கூற, ஒரு வழியாக நிகழ்ச்சி கை கூடி வந்தது.

பெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரி











ஆனாலும், பொறியியற் கல்வியில் மூழ்கிய மாணவர்களிடம் ஆங்கிலம் அதிகமாய்க் கோலோச்சும் காலத்தில் தமிழ் பதிவுகள் குறித்த கருத்தரங்கம் எந்த அளவுக்கு வெற்றியைத் தன்வசம் கொள்ளும் என்ற சந்தேகம் மனதில் கனத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது.











ஒரு வழியாய் திட்டமிட்டபடி 07.08.2010 காலை பத்து மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியற் கல்லூரிக்கு சென்றடைந்தோம்.


கணினி தொழில் நுட்பத் தலைவர் முனைவர். ஜெயபதி, கணினி பிரிவுகள் முதன்மைத் துறைத் தலைவர் முனைவர். பாலமுருகன், இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கௌசல்யா மற்றும் பேராசிரியை. ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் இந்திய கணினி சமூக அமைப்பு (CSI) உறுப்பினர்கள் (கணினி அனைத்துப்பிரிவுகளையும் சார்ந்தவர்கள்) சுமார் 260 பேருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. நண்பர். பழமைபேசி அவர்கள் முதலில் வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து சிறிது உரையாற்றியபின் தமிழில் வலைப்பக்கங்களின் அவசியம், அதை உருவாக்குதல், அதில் இடுகைகள் மூலம் பங்கேற்பு என்பது குறித்து மிக விரிவாக கருத்தரங்க உரையாற்றினார். பொறியியற் கல்லூரி மாணவர்கள் மத்தியில் தமிழ் வலைப்பதிவுகள் குறித்த விளக்கங்கள் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.














கருத்தரங்கில் குறிப்பிட்ட சில வலைப்பக்கங்கள், திரட்டிகள், ஈரோடு குழுமம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வலைப்பக்கங்களில் என்னுடைய பங்கு என்ற தலைப்பில் நானும் சிறிது உரையாற்றினேன்.


நிகழ்ச்சியில் மிகவும் அசந்து போன துறைத்தலைவர் முனைவர். ஜெயபதி நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் கொங்கு வளாகத்தில் இயங்கும் கொங்கு பண்பலையில் உடனடியாக ஒரு செவ்விக்கு (பேட்டி) ஏற்பாடு செய்து பழமைபேசி மற்றும் என்னிடம் செவ்வி எடுத்து பதிவு செய்யப்பட்டது. சட்டென திட்டமிட்ட நிகழ்வில் எந்த முன் தயாரிப்புமின்றி செவ்விக்காக கேள்விகளை வீசிய இரண்டு மாணவிகளின் திறமை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.


சென்னிமலை
எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரி

நிகழ்ச்சியின் நிறைவில் கொங்கு வளாகத்தில் திளைத்த மகிழ்ச்சியுடன், அடுத்த நிகழ்ச்சியை நடத்த சென்னிமலைக்கு கிளம்பினோம். நிகழ்வு சென்னிமலையில் இருக்கும் எம்பிஎன்எம்ஜெ (MPNMJ) பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE) சார்ந்த 263 மற்றும் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.













தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன், முதல்வர் (பொறுப்பு) பேரா.சண்முகசுந்தரம், மிகுந்த முன்னேற்பாடுகளுடன் திட்டமிட்டிருந்த துறைத்தலைவர் பேரா. பார்த்திபன், விரிவுரையாளர்கள் திரு.மோகன், திரு. கோபி, திரு. மகேஷ் ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

உரிய நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நண்பர். பழமைபேசி அவர்கள் அந்த மாணவர்களிடமும் வெளிநாட்டுக் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து உரையாற்றிய பின் தமிழ் வலைப்பதிவுகள் குறித்து மிக நேர்த்தியாக, மிக அற்புதமாக, தெளிவாக கருத்துரை வழங்க, ஆங்காங்கே மாணவர்களிடமிருந்து கேள்விக்கணைகள் பறந்தன. மாணவர்களிடையே ஊடுருவி, ஒன்றாய் கலந்து நண்பர் மிக அற்புதமாக நிறைவு செய்தார்













நிகழ்ச்சி தொகுப்புரையை வழங்கிய ஐந்து மாணவ, மாணவியர்களின் தயாரிப்பு மெச்சத் தகுந்த அளவில் இருந்தது. ஒரு மனிதனின் சமூகக் கடமை மற்றும் அதில் என் வலைப்பக்கங்களின் பணி என்ற தலைப்பில் முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.













கிடைத்த வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்தி, கனவுகளை வீரியமாகக் கொண்டுள்ள மாணவ சமுதாயத்திடம் நிதானமாக விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளன. அரவணைத்து வளர்ப்போம், நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தாய்மொழி சார்ந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாய் நிரப்புவோம்.













இரு நிகழ்ச்சிகளும் சிறப்புற நிறைவடைந்த மகிழ்ச்சியோடு இன்றைய பொழுது மிகப் பயனுள்ளதாக நிறைந்தது.

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பர் பழமைபேசி, முனைவர், கௌசல்யா மற்றும் பேராசிரியர் பார்த்திபன்.

இந்த நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டபோது தட்டிக்கொடுத்த எம் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கே இந்த மகிழ்ச்சி சமர்ப்பணம்.


___________________________________________________________________

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO