Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Monday, December 12, 2011

சங்கமம்‘2011 அழைப்பு

சங்கமம்-2011

இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள். 


எங்கு, எப்போது, என்ன?

சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2001 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?

ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:

முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011  நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு


தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.


மேலதிக விபரங்களுக்கு:

தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்   (பொருளர்)  97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707

நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்.

.

Friday, July 22, 2011

புத்தகத் திருவிழா அரங்க வரைபடம் மற்றும் பதிப்பகங்கள் விபரம்


அன்பு நண்பர்களே.. 

ஈரோடு மாநகரில் வருகின்ற 29ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தகத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இப்போது மேலும் புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்திற்கான அரங்க வரைபடமும், பதிப்பகங்களின் ஸ்டால் எண்களும் ஈரோடு புத்தகத் திருவிழா இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தங்களின் பார்வைக்காக அதை இங்கும் பகிர்கிறோம். 


 (பேச்சுப்போட்டிக்கான விளம்பரம்)


மேலும் இதில் கலந்துகொள்ள அனைத்து வலையுலக நண்பர்களையும், வாசகர்களையும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக அன்போடு அழைக்கிறோம்.


.

Tuesday, July 19, 2011

ஈரோடு புத்தகத் திருவிழா - 2011

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

வலையுலக நண்பர்களும், வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த மக்கள் சிந்தனைப்பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா-2011 வருகிற 29ம் தேதி (29.07.2011) அன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.



அதுசமயம் அனைத்து வலையுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் வருகை தந்து பயனடையுமாறு அனைத்து ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக  அன்போடு அழைக்கிறோம்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியல்

மேலும் தகவலுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா இணையத்தைப் பார்க்கவும்


-

Friday, June 10, 2011

பொறியியல் கல்லூரியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு..



12 ஆம் வகுப்பு முடித்து B.E. படிக்க விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு விசுவின் அரட்டை அரங்கம் சார்பில் உதவி வழங்கப்படுகிறது.


சென்னை மற்றும் ஓசூரில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 10 இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

1) கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்தது 190 எடுத்திருக்க வேண்டும்.


2) எந்த மதமாகவும், சாதியாகவும் இருக்கலாம்.

3) விண்ணப்பங்களை, மதிப்பெண் பட்டியல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட பெற்றோரின் வருமான சான்றிதழுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விசுவின் மக்கள் அரங்கம்
த.பெ.எண்: 6900
சென்னை: 600040
தொலைபேசி: +91 96777 - 60909



Monday, March 7, 2011

நாணயம் விகடனில் நம்ம கார்த்திக்!!!!







ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாகவும் வாழ்த்துக்கள் கார்த்திக்.


.

Tuesday, December 14, 2010

சங்கமம்‘2009 பற்றி பதிவர் வானம்பாடிகள்

பிரமாதம். அசத்தல். சாதிச்சிட்டீங்க என்பது போன்ற வார்த்தைகளைத் தனியாகச் சொன்னாலும் மொத்தமாகச் சொன்னாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்று சொல்லிவிடலாம்.

ஆனால், முதன் முறையாக ஒரு பதிவர் கூடலை மிக அழகான ஓர் மாலைப் பொழுதில் மிக மிக அருமையாக நடத்திக் காட்டிய ஈரோடு பதிவர்களைப் பாராட்ட வார்த்தைகளைச் செதுக்குவதைவிட பட்டென்று மனதில் தோன்றுவதை சொல்லுவது தவிர வேறு வழியில்லை.

கூட்டுமுயற்சி, பங்கேற்பு, பங்களிப்பு, நிர்வகித்தல், விருந்தோம்பல் இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் எடுத்துக் காட்டாக இந்த நிகழ்ச்சி இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. சந்திப்பின் முத்திரைச் சின்னத்தில் மோட்டோ எனும் முது மொழியாக 'அட நீங்கதானா" எனப் போட்டிருக்கலாம் போல்.


பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் நேசக்கரம் குலுக்கி கேட்ட முதல் கேள்வி இது. கிட்டத் தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட பதிவர்களும் வாசகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சந்தேகமற நிரூபணமானது வாக்குகளையும் பின்னூட்டங்களையும் தாண்டி, நீங்கள் எல்லோராலும் படிக்கப்படுகிறீர்கள் என்பது. ஒரு பதிவருக்கு, இதைவிட ஊக்கமோ, தன்னம்பிக்கையோ வேறெப்படி தரவியலும்.

ஈரோடு பதிவர் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் மறைமுகமான இந்தத் தலைப்பு இருந்திருக்கிறது. இதற்காக நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும், மற்ற பதிவர்கள் சார்பிலும் என் நன்றி.

சுவையான தேநீருக்குப் பின், சரியாக 4 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, திரு. கதிர் அழைக்க திரு ஆரூரன் வரவேற்பு உரையாற்றினார். பதிவு என்பதின் முக்கியத்தை கலிங்கன் காளிங்கனாகவும் கம்ப நாடன் கம்ப நாடாராகவும் திரிந்ததை நகைச்சுவையோடு கூறிடினும், பதிவின் அவசியத்தை, பொறுப்புணர்ச்சியை உணர்த்தியது பாராட்டத் தக்கது.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் வசந்த்குமார், வலைச்சரம் சீனா, சுமஜ்லா, பழமைபேசி, பட்டர்பிளை சூர்யா, செந்தில்வேலன், ரம்யா, அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். “ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்” பதிவர்கள் தண்டோரா, வானம்பாடி(நானு நானு), அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி, கார்த்திகை பாண்டியன் ஆகியோரால் துவக்கப் பட்டது.

கலந்துரையாடல் நேரம் நிகழ்ச்சியின் மகுடம் எனலாம். இதனை நிர்வகிக்க லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர் ஆகியோர் குழு பொறுப்பேற்க அனானிகள் குறித்த விவாதம் சூடு பிடித்தது எதிர்பாராத சுவாரசியம். அவ்வப்போது தோழமையான, நகைச்சுவையான மட்டறுப்புகளுடன், வெகு சிறப்பாக அமைந்துவிட்டது.





விழா முடிந்ததும், செவிக்குணவில்லாத காரணத்தால், சிறிதன்றி பெரிதாகவே கொங்குநாட்டின் விருந்தோம்பல் அழைத்தது. சுவையான உணவு வாழைமட்டை(பாக்கு?) தட்டிலும், அளவான வாழையிலையில் பரிமாரப் பட்டமையில் கூட அமைப்பாளர்களின் சமூக அக்கறை வெளிப்பட்டது.

விளக்கமாக எழுத எண்ணியிருப்பதாலும், கூடியவரை உரைகளை ஒலிப்பதிவில் தர எண்ணியிருப்பதாலும், சுருக்கமாக (அடங்கொன்னியா! இது சுருக்கமா?) ஒரு சின்ன சுயதம்பட்டத்தோடு நெஞ்சுகொள்ளா நன்றியோடு முடிக்கிறேன்.

இந்த என் 300வது இடுகையை, ஒரு மிகச் சிறந்த பதிவர் சங்கமத்தின் நிகழ்வுகளைத் தாங்கி வருவதோடு, என்னை குறைந்தது எழுபது சக பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும், அவர்களை எனக்கும் நேரடியாக சந்திக்க வாய்ப்பளித்த திரு கதிர், திரு ஆரூரன், பாலாஜி, வால்பையன் மற்றும் இதர ஒருங்கிணைப்பாளர்களுக்கும், என் எழுத்தை வாசிக்கும் இதர அன்பர்களுக்கும் என் நன்றியைப் பகிர வழிவகுத்த ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.


நன்றி வானம்பாடிகள்



இந்த வருடம் சங்கமம்‘2010



.

Thursday, December 9, 2010

26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...(சங்கவி)

பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்..

கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...



பதிவர் சந்திப்பு வருகிற 26.12.2010 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.

நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...

பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க பழகலாம்...

என்று பழகுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426


நன்றி சங்கவி


.

Wednesday, December 8, 2010

சங்கமம் - 2010




டிசம்பர் மாதம்.. கொண்டாட்டங்களின் மாதம்... பலப்பல பண்டிகைகள்,பல விடுமுறை நாட்கள்,வரப்போகும் புதிய வருடத்தினை வரவேற்கும் குறுகுறுப்பு இவையெல்லாம் அடங்கிய டிசம்பரின் மற்றுமொரு மனதில் நிற்கும் நிகழ்வு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்‍‍ 2010.


அத்தகையதொரு மகிழ்வான தருணத்தில் மனம் மகிழ ஈரோடு வலைப்பதிவர் குழுமம் அன்புடன் அழைக்கிறது.உங்கள் வருகைக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.


நாள் :26/12/2010
நேரம்: காலை 11.00 மணி

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள‌



கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கமேஸ் - 9842910707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426


erodetamizh@gmail.com


நன்றி இய‌ற்கை ம‌க‌ள்

Thursday, October 14, 2010

வாய் இறுகல் நோய்

நோயின் தன்மை :
கன்னத்து உட்புறதசைகள் அதன் இலகு தன்மையை இழந்து இறுகிப்போய் வாய் திறப்பது கடினமாகும், இந்நிலையே வாய் இறுகு நோய்.



அறிகுறிகள்:
வாயின் சதைகளில் ரத்தஓட்டம் குறைந்து சதை வெளிறி காணப்படுதல், எரிச்சல், வாய் உலர்ந்து போதல், சுவை அறியும் திறன் குறைதல் போன்றவை இதன் அறிகுறிகள். சில நேரங்களில் குரல் மாற்றம், கேக்கும் தன்மை குறைதல் போன்றவையும் ஏற்படலாம். பொதுவாக நான்கு விரல்கட்டை அளவு திறக்கும் வாய், இரண்டு விரல்கட்டை அளவுக்கும் குறைவாய் திறத்தல் இந்நோயின் கொடுமையை உணர்த்தும்.

காரணிகள் :
பொதுவாக பான்பராக், பாக்கு, புகையிலை, அதிகமான காரம் பயன்படுத்துவோர், வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.



பாக்கு, தம்பாக்கு, புகையிலை, அதிக காரம் போன்றவற்றை தவிர்த்தல், இரும்பு சத்து, வைட்டமின் அதிகம் உள்ள உணவு அதிகமாய் எடுத்தல், அவ்வப்போழுது பல் மருத்தவரை காணுதல், வாய் நலம் பேணுதல், நலம் தரும்.

துவக்க நிலையில் பான்பராக், பாக்கு போடுவதை நிறுத்துதல், காபி, டீ, ஆல்கஹோல் தவிர்த்தல், மற்றும் சில எளிய வாய் திறக்கும் பயிற்சிகள் போதும். முற்றிய நிலையில் ஸ்டிராய்ட் இன்ஜெக்சன் தரும் முறையும், அறுவை சிகிச்சையும் தற்சமயம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. ஸ்டெம் செல் கொண்டு மருத்துவம் செய்தல் குறித்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று வருகின்றன.

நன்றி பல் மருத்துவர் ரோகிணிசிவா.


.

Saturday, August 28, 2010

வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை...

தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)


View Larger Map

புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி சிறப்படைய ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

Thursday, July 22, 2010

ஈரோடு புத்தகத் திருவிழா-2010

வலையுலக சொந்தங்களுக்கு ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக ஒரு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த ஐந்தாண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழா- 2010 சிறப்புடன் தொடங்கவுள்ளது.






நாள் : ஜுலை மாதம் 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ம் தேதி வரை (மொத்தம் 12 நாட்கள்)

இடம் : வ.உ.சி. பூங்கா (பேருந்து நிலையம் அருகாமை) ஈரோடு.



வலையுலக பெருமக்கள் திரளாக பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்.


மேலும் விபரங்களுக்கு ஈரோடு புத்தகத் திருவிழா இணையதளத்தை பார்க்கவும்



Wednesday, June 16, 2010

பல்வலியும் நெஞ்சுவலியும்...

ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமை "அப்பா முருகா இன்னைக்கு என்னைய நம்பி வர்ற பேஷன்ட் நல்லது செய்ய எனக்கு வழிகாட்டு" என வேண்டியபடி கடைய திறந்து இருந்தேன். வருகிறேன் எனச் சொன்ன பேஷன்ட்களில் ஒருவர் மட்டும் வந்து பல் சுத்தம் செய்து சென்றார். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவனும் அவன் தந்தையும் வந்தார்கள் பல் எடுக்க.அந்த சிறுவனுக்கு அவனுடைய கடவாய் பல் மிகவும் சொத்தையாகி எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. சிறுவன் பார்க்க ஆரோக்கியமாய்தான் இருந்தான் என்பதால் நானும் பொதுவான கேள்விகள் கேட்டு பல் எடுப்பதற்குமுன் குடுக்க வேண்டிய ஊசிமருந்தை செலுத்திவிட்டு என்ன படிக்கிறாய், என்ன சாப்பாடு, என்ன சினிமா பார்த்தாய் போன்ற கேள்விகள் மட்டும் கேட்டு அவனை ஆசுவசபடுத்திகொண்டு இருந்தேன்.

சில நிமிடங்கள் கழித்து அவன் போதிய மரவிப்பு வந்ததாய் சொல்லிய பின் பல் எடுத்தேன். நீண்ட நாட்களாய் சொத்தையாய் இருந்ததால் வலிக்கிறது,மயக்கம் வருவது போல் இருக்கிறது என்று கூறினான். பல் எடுத்த பின்.இது சகஜம் தானே என வலி மருந்தை ஊசியில் செலுத்திவிட்டு சிறிது நேரம் படுத்து இருக்கச்சொன்னேன். "அப்பா பிரச்சினை இல்லாம முடிஞ்சுது பல் உடையல" என்று எண்ணியபடி அவன் தந்தையிடம் பேச ஆரம்பித்தேன். "ஏங்க இவ்வளவு மோசம் ஆகிறவரை என்ன செஞ்சீங்க ? கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தா பல்லை வேர் சிகிட்சை செய்து காப்பாத்தியிருக்கலாம், இல்ல பல் எடுக்கணும் என்றலும் முன்னாடியே செஞ்சுருக்கலாம்" என்று சொல்லிமுடிக்க அவர் "இல்லங்க எடுத்து இருக்கலாம்தான், ஆனா நெஞ்சுவலினு ஆசுபத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சு திரிஞ்சு அதுதாங்க லேட் ஆகி போச்சு "என்றார். எனக்கோ "ஐயோ இவரை போய் நாம் கடிஞ்சுட்டமே" எனத்தோன்ற குரலில் கொஞ்சம் சாந்தம் வரவழைத்து "இப்ப பரவாயில்லையா?, அவங்க அம்மா கூட பையன அனுப்பிருக்கலாமே" என்று சொல்லிமுடித்தேன்.

அழகாய் சொன்னார் "நெஞ்சுவலி எனக்கு இல்லீங்க, பையனுக்கு" என்றார். சரி அதுவேறு மகன் என்று எண்ணிய படி கேட்க,அவர் சொன்ன பதில் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறை. இப்ப பல் எடுக்கப்பட்ட சிறுவன் தான் இருதயநோயாளி. இதற்கு முன் பார்த்த பல் டாக்டர்கள் ரத்தஅழுத்தம், மற்றும் இருதய நிபுணரின் பரிந்துரை வேண்டும் எனக்கூறியிருக்கலாம். அந்த அனுபவத்தில் பாடம் கற்ற அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் எனக்கும் ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. மறுமுறை நாளை வர வேண்டும் என்று கூறி பல் எடுத்தபின் கடைபிடிக்க வேண்டிய அனைத்தையும் கூறி விடைகொடுத்தேன். அவன் நல்ல நேரமோ என் நல்ல நேரமோ எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.



உங்களுக்கு அலைய முடியாது என்பதற்காக மருத்துவரிடம் எந்த தகவலையும் மறைக்காதீர்கள். உங்களுடைய எந்தவொரு உடல் நலக்குறைவையும் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அதற்கு மாற்று மருத்துவமுறை இருக்கும் . அறிவாளிகளாய் மருத்துவரிடம் இருந்து எதையும் மறைத்து உங்கள் சிரமத்தை பின்னர் அதிகம் ஆக்கிக்‘கொல்லா’தீர்கள். ஆம் எழுத்து பிழை அல்ல வாழ்க்கையே பிழை ஆகும் என்பதை சொல்லவே இந்த "கொல்லாதீர்கள்".

ஒரு நபர் மருத்துவமனையில் இருந்து திடகாத்திரமாக வெளியேறுவது வரை மருத்துவரின் பொறுப்பு. பல் எடுத்து இரண்டு நாள் கழித்து மரணம், ஒரு மாதம் கழித்து கான்சர் வந்தது என்பது எல்லாம் மருத்துவதுறையால் மறுக்கப்படும் சம்பவங்கள். பல் எடுக்கப்பட்டது மட்டுமே ஒருவரின் மரணதிற்கோ இல்லை வேறு உடல்நலக் குறைவுக்கோ காரணமாய் இருக்க முடியாது. பல் எடுக்கப்பட்ட பின் அந்த நோய் தன்னை வெளிப்படுயிருக்கலாம் என்பது மட்டுமே உண்மை. பெரும்பாலும் சொல்லப்படும் சோதனைகளும், சிகிச்சைக்கு முன், பின் கூறப்படும் அறிவுரைகளும் உங்கள் நலனுக்கே. தங்கள் விருப்பம் போல் மருந்து உட்கொள்வது, மருத்துவரின் அறிவுரைகளை புறக்கணிப்பது நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் மிகபெரிய கண்டிக்கக்கூடிய செயல்.

பின் ஏதும் தவறு நடக்கும் பொழுது மருத்துவரை குறை கூறி பயன் இல்லை. உங்கள் நலனை பேணுவது தான் மருத்துவரின் தலையாய கடமை. உங்கள் நலனை காக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.


நன்றி
பல் மருத்துவர் ரோகிணி சிவா
அவரின் வலைப்பூ


...

Wednesday, May 5, 2010

மாணவர் மரங்கள்!


''வீட்டுக்கு ஒரு மரம் வைப் போம்... நாட்டுக்கு ஒரு நலன் செய்வோம்!'' என கரூரில் எங்காவது சுவர் விளம்பரங்களோ, விழிப்பு உணர்வு ஊர்வலமோ தென் பட்டால்... நிச்சயம் அது கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பாகத்தான் இருக்கும்!

கரூர் வள்ளுவர் கல்லூரி... முழுக்க முழுக்கப் பசுமை தவழும் வளாகம். நுழைவாயிலில் மாணவர்கள் நட்டு வைத்த மரங்களின் வனப்பு நம் மனதைக் கவர்கிறது.

கல்லூரியின் எம்.டி-யான செங்குட்டுவன் நம்மிடம், ''எனக்கும் என்னோட குடும்பத்தினருக்கும் இயற்கை மற்றும் தாவரங்கள் மீது அதிகப் பற்று. அதனால், கடந்த எட்டு வருஷமா எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு மாணவனின் பிறந்த நாளுக்கும், ஒரு மரக்கன்று பரிசாகக் கொடுக்கிறோம். கரூர் அரசு தோட்டக் கலைப் பண்ணையில் இருந்து பெற்று, எல்லா வகையான மரக் கன்றுகளும் பரிசளிப்போம். மாணவர்கள் வளர்க்கின்ற மரங்களை, அந்த ஒரு வருட முடிவில் பார்த்து, மதிப்பெண் கொடுத்து, சிறப்புப் பரிசுகளும் வழங்குகிறோம்.


அதோடு, கரூர் நேஷனல் ஹைவே ரோடு இரு புறமும் மரங்களை நட்டு, பராமரித்து வளர்த்து வருகிறோம். இதுவரை சுமார் 4,000 மரக்கன்றுகளை பராமரித்து வளர்த் துள்ளோம். ஏப்ரல் மூன்றாம் தேதி 210 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி, 10 ஆயிரம் மரக் கன்றுகளைக் கொடுத்தோம். வேப்ப மரக் கன்று, புளிய மரக் கன்று, அரளி என இப்போது எல்லாமே மரங்களாக எழுந்து நிற்கின்றன!'' என்றார் சந்தோஷமாக.

கல்லூரியின் முதல்வர் சிவசங்கரன், ''நாங்கள் இந்த முறை கொடுத்த 10 ஆயிரம் மரக் கன்றுகளையும் எங்கள் கல்லூரியில் நட்டு, ஒவ்வொரு மரத்திலும் அந்த மாணவரின் பெயர் எழுதி, வகுப்பையும் எழுதிவைப்போம். கல்லூரி முடித்துவிட்டு, எதிர்காலத்தில் தன் குடும்பத்தோட இந்தக் கல்லூரிக்கு அந்த மாணவர் வந்து பார்க்கும்போது, அல்லது அவரின் மகனோ, மகளோ வந்து இந்தக் கல்லூரியில் படிக்கும்போது, அது நிச்சயம் ஓர் ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும்!'' என்றார் குதூகலமாக!


- நன்றி ஜூ.வி


Friday, April 23, 2010

வேலை வாய்ப்பு....


வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்....

தற்போது நண்பர் பதிவர் சங்கமேஸ்வரன் (சங்கவி) அவர்கள் அலுவலகத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதில் ஈரோடு, கோவையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை எனக்கூறி உள்ளார்கள். கீழ்கண்ட வேலைகளுக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தகுதியுள்ளவர்களாகவும் வேலை வாய்ப்பிற்கு காத்திருப்பவர்களாகவும் இருந்தால் அவர்களின் சுயவிபரக்குறிப்பினை (பயோடேட்டா) கீழ்கண்ட நண்பரின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்..

  • sat10707@gmail.com


Top MNC Company in Coimbatore…

1. Software Engineer

2+ years of Web based development experience

(Asp.net, C#, MS SQL, JavaScript)

Experience with AJAX / ATLAS an advantage

Contact: karthikeyanp365@gmail.com

••••••••••••••

2. Process Associate (Voice) - Night Shift

Experience in a US outbound Call center

Excellent English Communication / Comprehension skills

Fresher can also apply

Contact: sat10707@gmail.com

Note: Please mention #567 as a reference ID in your resume.


நன்றி

சங்கவி


Thursday, March 18, 2010

'பிடிபடாத பிளாஸ்டிக் பூதம்... அச்சம் தராத அணு உலை அரக்கன் !'

தங்களின் சந்தோஷத்துக்காக சுற்றுலா செல்பவர்கள் ஒரு வகை! உலக நன்மைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் ஒருவகை! தாமரை... இதில் இரண்டாவது வகை!

சுற்றுச்சூழல் சீர்க்கேடு குறித்து உலகமெல்லாம் சுற்றி வரும் தாமரையைப் பற்றி அறியும்முன், அவர் கணவர் சீனிவாச ராவ் பற்றி ஒரு சிறு அறிமுகம்...

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், தன் நண்பன் ஞானசேகரனுடன் இணைந்து, உலகத்தில் உள்ள அணு ஆயுதங்களை அகற்ற வேண்டி 65 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து, உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து தன் பதற்றத்தை பதிவு செய்தவர் சீனிவாச ராவ். 1987-ம் வருடம், அக்டோபர் ஐந்தாம் தேதியை, சீனிவாசராவ் மற்றும் ஞானசேகருடைய தினமாக பிரகடனம் செய்தது அமெரிக்கா! அந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்தியர்கள் இவர்கள்தான்.

இத்தனை வருடங்களாக தேக்கமின்றி தொடரும் சீனிவாச ராவின் பயணத்தில், தன்னையும் தன் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டுள்ளவர்தான் தாமரை! இவர், பிரபல அரசியல்வாதியான பேராசிரியர் தீரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது!

"எங்களின் இத்தனை வருட சுற்றுப் பயணத்தில், சமீபத்தில் கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட அனுபவம், 'இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது' என்ற தெளிவை, பதற்றத்தை, பயத்தை தந்தது!'' என்று ஆரம்பித்தவர், அந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"அந்த மாநாட்டு அரங்குக்கு அருகிலேயே, எங்களைப் போல உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்ட சமூக நல அமைப்புகள், ஆர்வலர்கள் நடத்திய 'மக்கள் மாநாடு (The People Summit) நடந்தது. சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை வலியுறுத்திய அந்த நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன். நம் பூமியை பாதுகாக்க வேண்டிய மிகமுக்கிய தருணத்தில் நாம் இருப்பதை அந்த மாநாட்டின் மூலம் உணர்ந்தேன்!

நடந்து முடிந்த மாநாட்டை 'வெற்றி' என்று வகைப்படுத்துவது சரியாக இருக்காது. அதற்கு காரணம், அமெரிக்காவைக் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவிதமான திட்டவட்ட தீர்வும் இல்லாததே. அதுமட்டுமன்றி, இந்த கோபன்ஹேகன் மாநாட்டின் தீர்மானங்கள் அனைத்தும், 26 முக்கிய நாடுகளை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்களான பல மூன்றாம் உலக நாடுகள் புறந்தள்ளப்பட்டு விட்டன.



கூடவே, 'இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவிதமான சட்டதிட்டத்தையும் உருவாக்காத வகையில் இந்த மாநாட்டை தங்களுக்கு சாதகமாக திருப்பி குழப்பம் செய்து விட்டன' என்று வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அவசியமான கட்டுப்பாட்டைக்கூட நம் அரசும் மக்களும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அந்த பிளாஸ்டிக் பைகள்தான் கழிவுநீர் வாய்க்காலில் சென்று நீர் செல்வதை தடுத்து விடுகிறது. தேங்கிய சாக்கடை நீரின் வாயிலாகத்தான் பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் பரவுகின்றன என்பதை நாம் சரிவர இன்னும் உணராமல் இருக்கின்றோம். கழிவு வாய்க்கால்கள் அடைத்துக் கொள்வதால், மழைக் காலங்களில் நமது நகரங்கள் அனைத்தும் வெள்ளப் பெருக்காகி விடுவதை பார்த்து வருகின்றோம்.

இந்த சிறுசிறு விஷயங்களில்கூட கட்டுப்பாடு பழகாத நாமும், நமது அரசும், அணு உலைகளால் ஆபத்து, கரியமிலவாயு கட்டுப்பாடு, பருவநிலை மாறுபாடு, புவிவெப்பநிலை உயருதல் என்கிற அதிபயங்கர ஆபத்துகளையெல்லாம் எப்படி சரிவர புரிந்துகொள்ளப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியவர்...

'அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் மக்களிடையே இதுபற்றிய விழிப்பு உணர்ச்சி தற்போது அதிகமாகவே உள்ளது. அதை வலுப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அரசுகளும் புவி வெப்பமடைதலுக்கு எதிரான கடுமையான சட்டதிட்டங்களை வரையறுத்துள்ளன. காலம்கடந்தாலும்கூட, இது ஒரு ஆரோக்கியமான மாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது என்பதில் என்னைப் போன்ற சூழல் ஆர்வலர்கள் பெருமை கொள்கிறோம்" என்று புன்னகை பூத்தார்.

தொடர்ந்தவர், "இயற்கையின் போக்கை மாற்றிய மனிதனின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளினால், கரியமில வாயுக்களின் அளவு கூடி, இன்றைய பூமியின் தட்பவெப்ப நிலை மாறிப் போயிருக்கிறது. விஞ்ஞானிகளின் எச்சரிக்கையின்படி தற்போதைய கரியமில வாயுவின் விகிதாச்சாரம் அண்டவெளியில் சேர்வது தொடருமானால் 2030-ம் ஆண்டில் நம் பூமியின் வெப்பநிலை உயர்ந்து, அது ஒட்டுமொத்த உயிரினங்களையும் பாதிக்கும் என்பது அதிர்ச்சியான உண்மை.

அதேபோல, அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளும் பனித்தகடுகளும் உருகி வருவதும் நமக்கு தெரிந்ததுதான். அதன் விளைவான கடல்மட்ட உயர்வினால் உலகில் உள்ள எத்தனையோ தீவு நாடுகள் கடலில் மூழ்கவிருக்கின்றன என்பதை இந்தப் பயணத்தில் புரிந்துகொள்ள முடிந்தது. கூடவே, கடுமையான பஞ்சங்களை ஏற்படுத்தக்கூடிய கொடும் வெயிலும், கடும் மழையும், பலத்த சேதம் விளைவிக்கும் பெரும் சூறாவளிகளும் உருவாகி உலக மக்களை பாதிப்படைய வைக்க இருக்கின்றன என்பதை நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது. ஆனால், நம் அலட்சியத்தால் நாம் அவற்றை வரவேற்றுதான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!'' என்று சொன்னவர், நம் அரசு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பேசினார்.

"உலகில் நீண்ட கடலோரத்தைக் கொண்ட நாடுகளில் நம்முடைய நாடும் ஒன்று. அதனால் வெப்பநிலை உயர்வால் விளையும் கடல்மட்ட உயர்வினால் நாம் பெருமளவு பாதிக்கப்படலாம். கடலோர மாவட்டங்களில் உள்ள நிலங்கள் மூழ்கலாம். பக்கத்து நாடான வங்கதேசமும் சந்திக்கவிருக்கும் இப்பிரச்னையால் அங்கிருந்து ஏறத்தாழ நான்கு கோடி மக்கள் 'சுற்றுச்சூழல் அகதிகள்' (Ecological Refugees) என்ற பெயரில் இந்தியாவில் தஞ்சமடையலாம். ஆக, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே முடுக்கிட வேண்டும்.

இந்திய நாட்டின் முதுகெலும்பு என ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்படும் விவசாயிகளின் பிரச்னைகளை சீர்செய்ய வேண்டும். ஆனால், நாமோ மேற்கத்திய நாடுகள் செய்த தவற்றைதான் செய்துகொண்டிருக்கிறோம். பழங்குடி மக்களின் நிலங்களையும், விவசாய நிலங்களையும் பெரும் தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்துகிறோம். அதனால் எழும் பிரச்னைகளை மக்களின் அரசாக நின்று சீர் செய்யாமல், அதிகார அரக்கனாக அடக்குகிறோம்.

பசுமைத் தொழிற்புரட்சியை இந்தியா முன்னின்று தொடங்கும்பட்சத்தில் அது எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்!'' என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இனம் புரியாத பயம் ஒன்று நம் மனதைக் கவ்விக் கொண்டதை மறுப்பதற்கு இல்லை!

நன்றி லாவண்யா
நன்றி அவள் விகடன்




  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO