Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, December 27, 2010

சங்கமத்தில் கலந்து கொண்ட பதிவர்கள் பட்டியல்

அனைவருக்கும் வணக்கம்,

வலைப்பதிவர்கள் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகவும் அடுத்தக்கட்ட நகர்த்தலாகவும் நேற்றைய சங்கமம்‘10 நிகழ்ச்சியினையும் சொல்லலாம்.

ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளின் மணநாளில் கொள்ளும் கடமையுணர்ச்சியும், பரிதவிப்பும், பரபரப்பும் எங்களுக்குள் இருந்ததென்றே சொல்லவேண்டும். அனைத்து நண்பர்களையும் கைகோர்க்கவைத்து அழகு பார்க்கவேண்டும் என்ற ஆவல் மற்றும் இந்த நிகழ்வை சிறப்புற நடத்தவேண்டும் என்று ஈரோடு பதிவர்கள் கொண்டிருந்த சிரத்தையும் ஒற்றுமையுணர்வும் மட்டுமே நேற்றைய நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக நடத்தியது என்றுசொன்னால் மிகையாகாது.

எங்கோ எதுவோ நடக்கிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தில் கலந்துகொண்ட அனைத்துப்பதிவர்கள், குறிப்பாக பெண்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியினை எத்தனைமுறை சொன்னாலும் தகும்.

சங்கமம்‘2010 வருகை பதிவேட்டில் பதிந்துள்ள நபர்கள்

1. நா. ஸ்ரீதர் (sridharrangaraj.blogspot.com)
2. மா.கார்த்திகைப்பாண்டியன் (ponniyinselvan-mkp.blogspot.com)
3. டாக்டர்.பி. கந்தசாமி (sawmysmusings.blogspot.com
4. என்.எஸ். விஸ்வநாதன்
5. அ. ஷர்புதின் (rasekan.blogspot.com
6. கா.சிதம்பரம் (சீனா) (cheenakay.blogspot.com)
7. செல்வி ஷங்கர் (pattarivumpaadamum.blogspot.com)
8. மோ. அருண் (tamizhstudio.com)
9. இரா. பிரபாகர் (prabhagar.com)
10. ஜாக்கி சேகர் (jackiesekar.com)
11. Pro. பெர்ணான்டோ
12. சீ. சங்கமேஸ்வரன் (sangkavi.blogspot.com)
13. பி. கதிர்வேலு (erodekathir.com)
14. ஆரூரன் விசுவநாதன் (arurs.blogspot.com)
15. தாமோதர் சந்துரு (chandruerode.blogspot.com)
16. த. பாலாஜி
17. ஜெ. கார்த்திக் (mpguys.blogspot.com)
18. ஜி.கணபதி (insightganapathi.blogspot.com)
19. ஜி.வேலாயுதம் (tamilsowmiya.blogspot.com)
20. சு. பழனிச்சாமி (tharapurathaan.blogspot.com)
21. கருவாயன் (எ) சுரேஷ்பாபு (photography-in-tamil.blogspot.com)
சிறப்பு அழைப்பாளர்
22. இரா. வசந்தகுமார் (kaalapayani.blogspot.com)
23. கு. மகுடீஸ்வரன்
24. க. பாலாசி (balasee.blogspot.com)
25. ஓசை செல்லா (osaichella.blogspot.com) சிறப்பு அழைப்பாளர்
26. பி. வின்சென்ட் (maravalam.blogspot.com
27. J. ராஜாஜெய்சிங் (agalvilakku.blogspot.com)
28. ஆர்.வி. சரவணன் (kudanthaiyur.blogspot.com)
29. கோபிநாத். A.P. (nandrivanakkamm
30. D. சரவணன் (srrnnec.blogspot.com)
31. செந்தில்குமார் (வாசகர்)
32. கிருஷ்ணகுமார் (parisalkaran.com)
33. வெயிலான் (veyilaan.com)
34. மா. செல்வம் (kadalaiyur.blogspot.com)
35. க. மகேஷ்குமார் (வாசகர்)
36. பி. கிருஷ்ணமூர்த்தி (krishnamoorthi-pk.blogspot.com)
37. பி. வேல்முருகன் (prasanthvel.co.cc)
38. என். சௌந்தர் (வாசகர்)
39. அமிர்தராஜ் (thappattai.blogspot.com)
40. ஷம்மி முத்துவேல் (shammisviews.blogspot.com)
41. ஆர். விஜயராகவன் (வாசகர்)
42. கே. ஷயத் முஸ்தபா (speedsays.blogspot.com)
43. Dr. ஏ. சின்னதுரை (tamilchinna.blogspot.com)
44. என். அருண்ராஜ் (valpaiyan.blogspot.com)
45. மோனி (monycoimbatore@worpress.com)
46. என். தர்மன் (வாசகர்)
47. N. நந்தகுமார் (angelnila.blogspot.com)
48. சு. சிவக்குமார் (sivaaa82.blogspot.com)
49. பாமரன் (சிறப்பு அழைப்பாளர்)
50. சிதம்பரம்.கி (சிறப்பு அழைப்பாளர்)
51. பெருமாள் முருகன் (perumalmurugan.blogspot.com) (சிறப்பு அழைப்பாளர்)
52. இராவணன் (iruppu.blogspot.com)
53. டி. குமரேசன் (juniorsamurai.blogspot.com)
54. ஆர். மோகன்தாஸ் (mdrpakkangal.blogspot.com)
55. வி.என். தங்கமணி (vnthangamani.blogspot.com)
56. ரவி உதயன் (raviuthan.blogspot.com)
57. வி. பழனி (வாசகர்)
58. பா. வினோத் (koozhankarkal.com) சிறப்பு அழைப்பாளர்
59. ஜெ. மனோகரன் (வாசகர்)
60. ந. பாலாஜி (வாசகர்)
61. என். கணேசமூர்த்தி (gans69.blogspot.com)
62. M.K. செந்தில் (வாசகர்)
63. வி.து. மனோதீபன்
64. கால சும்ரமணியம்
65. D. சரவணன்
66. T.V. புகழேந்தி
67. அடலேறு (adaleru.wordpress.com)
68. கும்கி (kumky.blogspot.com)
69. M.S. எழிலரசன்
70. ஆர். கலைவாணி
71. கோ. அன்பு
72. ப. செல்வக்குமார் (koomaali.blogspot.com)
73. அ. மாதேஷ்வரன் (madydreamz.blogspot.com)
74. L. தயாளன்
75. ஆர். லிவிங்ஸ்டன்
76. ஆர். ரமேஷ்குமார்
77. பி. முரளிகுமார் பத்மநாதன் (eniyoruvidhiseyvom.blogspot.com)
78. க.இரா. செந்தில்நாதன் (emperorever.com)
79. A.K. சாமிநாதன் (poonthalir.com)
80. செ. இராசசேகரன் (நண்டு @ நொரண்டு)
81. விஜி ராம் (மயில்)
82. தாரணிப்ரியா
83. தமிழ்ச்செல்வி (veetupura.blogspot.com)
84. K. ஜெயகுமார்
85. வெ. அருணாசலம்
86. செ. கலைவாணன் (eerode.blogspot.com)
87. ஆர். கோபி (ramamoorthygopi.blogspot.com)


(
குறிப்பு: மேலே குறிப்பிட்ட நபர்கள் எங்களது வருகைப்பதிவேட்டில் தங்களது வருகையை பதிந்துள்ளவர்கள், மேலும் பதிவேட்டில் பதியாமல் கலந்துகொண்ட இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்களும் வாசகர்களும் இருக்கிறார்கள். மேலும் இங்கே பலரின் வலைப்பூ முகவரி காட்டப்பட்டுள்ளது. இன்னும் பலபேர் வாசகர்களாகவே கலந்துகொண்டார்கள், அவர்களின் வலை முகவரிகள் இல்லை.)




..

Monday, March 1, 2010

வரமாய் வந்த மனைவி...

கையெழுத்துக் கூட ஒழுங்காய் போடத் தெரியாத ஒருவர், சென்னை‍யில் உள்ள பிரபல கல்லூரியில் விஸ்காம் துறையில் வகுப்பெடுக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.


கானா விஜி-‍‍ கருத்த தேகம், போலியோவில் பாதிக்கப்பட்டு ஒருகால் ஊனம், பிறப்பின் புனிதம் அறியாமை, பான்பராக் போட்டு குதப்பிக் கொண்டே பேசும் பேச்சு, பரட்டை தலை என பார்ப்பதற்கு பயங்கர தோற்றமாய் தான் முதலில் இருப்பார். அதே சமயம் அவர் பாட்டுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம்.. அத்தனை தெளிவான தத்துவ பாட்டுகள், ஊர் அறியாத மெட்டுக்கள்.




இரண்டு வருடங்களுக்கு முன், அலுவலக ரீதியாக அவரைச் சந்தித்தேன். அதுவரை என் மனதில் அன்னை தெரசா, பில்கேட்ஸ், பெரியார் என யாரோ என் ரோல்மாடல்களாக இருந்தார்கள். விஜியை சந்தித்த பிறகு அவர் மட்டுமே என் ரோல்மாடல்.. இப்போதும் எப்போதும்.. இனி விஜியுடனான என் சந்திப்பு..


''நம் மெரினா பீச்சாண்டதாங்க... நான் தம்மாத்தூண்டு கொழந்தையா இருந்தப்பவே எங்கம்மா என்னைக் கொண்டாந்து ரோட்டோரமா போய்ட்டு போயிடுச்சாம். பாவம்.... அதுக்கு என்ன கஸ்டமோ! நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து அயோத்தி குப்பம் ஏரியால தான் சுத்திக்கினு கெடந்தேன். எனக்கு பேரு ஒன்னும் கிடையாது. விலைமாது தொழில் பார்த்த விஜி அக்காதான் என்னை எடுத்து வளர்த்துச்சு.... கஸ்டமர்‍க்கிட்ட போகும் போதும் என்னை தூக்கிக் கிட்டு போகும். என்னை ஓரமா உட்கார வெச்சுட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வரும் போது பிரியாணி வாங்கி வந்து தரும்.. அதுவும் ஒரு நாள் நோய் வந்து செத்துப் போச்சு...'தா விஜி கூட சுத்திக் கிட்டு இருப்பான்னேன்னு எனக்கும் விஜின்னே பேரு வந்திடுச்சு..


விஜி அக்கா செத்து அதை சுடுகாட்டுக்கு தூக்கிக் கிட்டு போகும் போது, ஒருத்தர் கானா பாட்டு பாடிக்கிட்டே சுடுகாடு வரைக்கும் வந்தார்.. அன்னிக்குத்தான் முதன் முதலா எனக்கு கானா பாட்டுமேல ஆர்வம் வந்திச்சு... எப்படா பொணம் விழும்,கானா பாட்டு கேட்ப்போம்ன்னு சுடுகாட்டில திரிவேன்.. பொணம் எரிப்பேன்... கையில் காசு இல்லாம சின்ன சின்ன திருட்டு வேலை செஞ்சிருக்கேன்.. போலீஸ் ஸ்டேஷனெல்லாம் நமக்கு அத்துப்படி..என்று தன்னைப் பற்றி முன் உரை தந்தவர்.. தன் மனைவியைப் பற்றி சொன்னார்..




''ராயபுரத்தில ஒரு சேட்டம்மா இருக்கும். அம்மாவாசை பவுர்ணமி அன்னிக்கு என்னை மாதிரி ஏழைங்களை கூப்பிட்டு சோறு போடும்.. கையில் காசு குடுக்கும். எனக்கு அந்தம்மான்னா மரியாதை.. ஒருதபா ஜெயிலுக்கு போய்ட்டு வந்து ''எங்கடா சேட்டு வூட்டு அம்மான்னு விசாரிச்சா, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்குதுன்னாங்க.. போனா உசிர் போயி.. தூக்கிப் போட ஆளில்லாம கிடக்குது.. ஏன்ன்னு கேக்க யாரும் இல்லை.. யாரோ ஒரு சேட்டுக்கு மூணாவது பொண்டாட்டியா இருந்ததாம்.. அவனும் ஓடிப் போய்ட்டானாம்.. மனசு கேக்கலை எனக்கு.. அதுவரைக்கும் நான் சேர்ந்து வைச்சிருந்த இரும்பை கடையில் போட்டு, அங்கங்க அல்லு பொறுக்கி காசு சேர்த்து அந்தம்மாவை அடக்கம் செஞ்சேன்.. அப்போ அந்தம்மா கூடவே இருந்த பொண்ணுதான் என் பொண்டாட்டி சாந்தி... பக்கத்திலேயே நின்னு அழுதுக்கிட்டு இருந்திச்சு... அடக்கம் பண்ணிட்டு திரும்பி பார்த்தா என் கூடவே நின்னு அழுதுக்கிட்டு இருக்கு.. உன் சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களான்னு சொல்லு. அவங்க வீட்டில விடறேன்‍ன்னு கேட்டேன். யாரும் இல்லைன்னு பரிதாபமா சொல்லுச்சு.. சரி என் கூட வர்றியான்னு கேட்டதும் போதும் என் கூடவே வந்திருச்சு" என்று சொல்லியவாறே தன் மனைவியியை அறிமுகம் செய்து வைத்தார்.. கணவரின் வார்த்தைகளை தொடர்ந்தார் சாந்தி..



''அம்மா செத்ததும் சொந்தம்ன்னு சொல்லிக்க யாரும் இல்ல... எங்கம்மாவை அடக்கம் பண்ணின இவர் என்னையும் பார்த்துக்குவாருங்கிற நம்பிக்கையில் இவர் கூட வந்தேன். ஆரம்பத்தில சுடுகாடு பக்கத்தில்தான் இருப்போம். அப்புறம் நான் பயப்படறதைப் பார்த்துதான் வடபழனி பக்கத்தில வீடு பார்த்து குடி வெச்சார். இவரைப் பார்க்கறப்பெல்லாம் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். பெயர் தெரியாம ஒருத்தங்க இருப்பாங்களா என்ன? கூடவே தங்கியதில் ரெண்டு பேருக்கும் புடிச்சுப் போச்சு. ஒண்ணா குடித்தனம் நடத்த ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில இவரைப் பார்க்கவே எனக்கு பயமா இருக்கும். மணடை ஓடு, கோடாங்கி இதெல்லாம் வீட்டில வெச்சிருப்பாரு. திடிர்ன்னு காணாம போயிருவாரு, தேடின்னா சுடுக்காட்டில் படித்திருப்பாரு.. கேட்டா எனக்கு இங்கதான் தூக்கம் வருதுன்னு சொல்வார். கெஞ்சி, கொஞ்சி, அழுது ஒருவழியா அவரை வழிக்கு கொண்டு வந்தேன்" என்றபடியே விஜியைப் பார்க்க மிச்ச கதையை அவர் தொடர்ந்தார்.


''தெனமும் ஒழுங்கா குளிக்கணும்.. சட்டை போடாம வெளிய போகக் கூடாது, கிடைக்கிற காசை ஒழுங்கா சேர்த்து வைக்கணும், இதெல்லாம் சொல்லிக் குடுத்தது எனக்கு சொல்லிக் குடுத்தது அவள்தான். சாந்தி பேச்சக் கேட்டுத்தான் சுடுகாட்டுக்குப் போறதை நிறுத்தினேன்.. என் பாட்டு நல்லா இருக்குங்கிறதால வீதி நாடகத்தில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்புறம் ''கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன்"" என்றவருக்கு அதன் பின் வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்திருக்கின்றன..


இவரது வீதி நாடகங்களுக்கு பரிசும் பட்டமும் தேடி வந்திருக்கிறது. இவரைப் பற்றி டாக்குமண்ட்ரி படமும் வெளியாகியிருக்கிறது. தனியாக ஒரு நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார். மனைவியில் முயற்சியில் கையெழுத்து போடக் கற்றுக் கொண்டார். கால் ஊனத்தையும் தாண்டி டூவீலர் ஓட்டக் கற்றுக் கொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள்.. தான் பட்ட கஷ்டத்தை தன் மக்களும் படக் கூடாது என்று பெரிய பள்ளி ஒன்றில் தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைக்கிறார்.


இன்னிக்கு கல்லூரிகளில் அவர் சொல்லித் தரும் கானாப்பாடல்கள்தான் அன்று சுடுகாட்டில் பாடப்பட்டது... நேரமும் காலமும் கூடி வர இவருக்கு இன்று கைத்தட்டல் கிடைக்கின்றது..


வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு வருகிறது விஜிக்கு.. ஆனால் இவர் பெயர் மற்றும் அப்பா அம்மா பெயர் தெரியாததால் ரேஷன் கார்டு தர மறுத்துவிட்டது அரசாங்கம். பாஸ்போட்டுக்கும் அதே நிலைதான். இருப்பினும் தான் கடந்து வந்த இவ்வளவு தூரத்திக்கும் வழிதுணையாக வந்த மனைவி‍‍க்கு நன்றி சொல்லியே மீதமிருக்கும் நாட்கள் நகர்கிறது விஜிக்கு..


(கட்டுரை பற்றிய குறிப்பு): நான சந்தித்த சமயம், விஜிக்கு சினிமா படத்தில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அதன் பின் சில போன் உரையாடல்கள் தொடர்ந்தன.. சில மாதங்களில் அதுவும் நின்று போனது.. இருப்பினும் நான் சந்தித்த மனிதர்களில் மறக்க முடியாதவர் இந்த விஜி. அவரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுதான். பெயர் தெரியாமல் அனாதையாக திரிந்து வளர்ந்தவர் விஜி. அவரால் இன்று ஒரு கல்லூரியில் ஆசிரியராகி இருக்க முடிகிறது. அப்படியென்றால் நாமெல்லாம் சொக்க தங்கம். சொந்த வீடு, அம்மா அப்பா, அடிப்படைக் கல்வி, கொஞ்சம் போலவேனும் காசு, இன்னும் இன்னும்,, நமக்கென்ன குறை... நிச்சயமாய் இன்னும் சாதிக்கலாம். எனக்குள் விஜி விதைத்த விதை இதுதான்).


எழுதியது

சுபிவண்யா

அவரது வலைப்பூ (பிரேமா மகள்)




Wednesday, February 17, 2010

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி




என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்தபோது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.

இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.

ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன்.....பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை.......கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.






பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறைபாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.





அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.


பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.







திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.



இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.....

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்.....கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.

பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த "மதர் மிரா" வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது...............






பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்
SCHOOL FOR PERFECT SIGHT, PONDICHERRY, PHONE: 0413-2233659

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO