பதிவுலகத்துக்கு பணிவான வேண்டுகோள்
இனிய தோழமைக்கு..
வழக்கத்தை மீறி இந்த கோடை மிகக் கடுமையாக இருப்பது போலவே தோன்றுகிறது. நாம் பயன்படுத்தும் நீருக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. உடனடியாக நம்மால் செய்ய முடியும் என்பது நாம் பயன்படுத்தும் நீரில் சிக்கனத்தைக் கடை பிடிப்பதே.
அனைத்து பதிவுல நண்பர்களையும் பணிவோடு வேண்டுவது, தண்ணீர் சிக்கனம் குறித்து முடிந்தவரை உங்கள் தளங்களில் எழுதுங்கள். இது படிப்பவர்கள் மத்தியில் மிக நிச்சயமாக ஒரு தாக்கத்தைக் கொண்டு வரும். பதிவுகளில் நாம் பகிர்ந்து கொள்ளும் விசயங்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்களைச் சென்றடையும் வகையில் ஈரோட்டில் ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமம் சார்பாக தண்ணீர் சிக்கனம் குறித்த பிரசுரங்களை வெளியிட்டு அனைத்து பொதுமக்களிடம் சென்றடையச் செய்யலாம் என ஆலோசித்து வருகிறோம்....
இணைந்த கரங்கள் மூலம் ஒரு நல்முயற்சியை முன் வைக்கின்றோம். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
38 Comentários:
அனைத்துலக பதிவர் சங்கம் சார்பாக நான் இதை வழிமொழிகிறேன்!
4 ஓட்டு ஆனா ஒரே ஒரு பின்னூட்டம்!
நீரை சேமிக்கும் முன்னால் பின்னூட்டத்தை சேமிக்கிறிங்களா!?
//நீரை சேமிக்கும் முன்னால் பின்னூட்டத்தை சேமிக்கிறிங்களா!?//
:-)))
\\ 4 ஓட்டு ஆனா ஒரே ஒரு பின்னூட்டம்!
நீரை சேமிக்கும் முன்னால் பின்னூட்டத்தை சேமிக்கிறிங்களா!? \\
பின்னூட்டமும் போட்டாச்சு...
சமீபத்தில்...
இயற்கை மகளின் - ஒரே ஒரு லிட்டர் பிளீஸ்
மற்றும்
அடர்கருப்பு காமராஜ் அவர்களின் நாம் என்னசெய்யப் போகிறோம்
..........ஆகியவை அவசியமான இடுகைகள்
FYI
நிறைய பதிவர்கள் இதுபத்தி எழுதியிருக்காங்க, எழுதிட்டுருக்காங்க.
வின்செண்ட் பதிவு:
http://maravalam.blogspot.com/2010/03/blog-post_1543.html
//ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் குழுமம் சார்பாக தண்ணீர் சிக்கனம் குறித்த பிரசுரங்களை வெளியிட்டு அனைத்து பொதுமக்களிடம் சென்றடையச் செய்யலாம் என ஆலோசித்து வருகிறோம்....//
செயல் படுத்த வாழ்த்துகள்.
ஏதாச்சியும் செய்யுங்க சாமிகளா நாங்களும் கலந்துக்கிறோம்.
அன்புடன்
சந்துரு
//தாமோதர் சந்துரு said...
ஏதாச்சியும் செய்யுங்க சாமிகளா நாங்களும் கலந்துக்கிறோம்.
//
அண்ணா... நோட்டீஸ் அடிச்சிடலாம்..
எப்படி எல்லார்கிட்டேயும் கொண்டு சேர்க்கிறது என்பது குறித்து யோசனை சொல்லுங்களேன்
//அண்ணா... நோட்டீஸ் அடிச்சிடலாம்..
எப்படி எல்லார்கிட்டேயும் கொண்டு சேர்க்கிறது என்பது குறித்து யோசனை சொல்லுங்களேன் //
காலை பேப்பரில் வைக்கலாம், வீடு வீடாக கொடுக்கலாம், புறப்பட தயாராக இருக்கும் பேருந்துகளில் கொடுக்கலாம்!, கடை வீதிகலீல் கொடுக்கலாம்!
ஆனால் எப்படி படிக்க வைப்பது!?
// காலை பேப்பரில் வைக்கலாம், வீடு வீடாக கொடுக்கலாம் //
இரண்டும் என் பொருப்பு...
நோட்டிஸை அப்படியே கொடுத்தால் படிக்காமலேயே இதில் என்ன இருக்கிறது என்று கேட்டு தூக்கி வீசி விடும் அபாயம் இருக்கிறது.கசக்கி,சுருட்டி கொடுக்கவும். உள்ளே என்ன எழுதியிருக்கிறது என்று அறியும் ஆவல் அதிகமாகிவிடும்.(ஒரு விளம்பர யுக்திதான்..வேறு எதுவுமில்லை)
Good start !!!!!
hope to see a glowing,glorifying NGO!!!!
பதிவர் ஆதி எழுதியுள்ள விசயங்கள் உபயோகமானது
http://www.aathi-thamira.com/2009/03/blog-post_25.html
/வால்பையன் said...
//அண்ணா... நோட்டீஸ் அடிச்சிடலாம்..
எப்படி எல்லார்கிட்டேயும் கொண்டு சேர்க்கிறது என்பது குறித்து யோசனை சொல்லுங்களேன் //
காலை பேப்பரில் வைக்கலாம், வீடு வீடாக கொடுக்கலாம், புறப்பட தயாராக இருக்கும் பேருந்துகளில் கொடுக்கலாம்!, கடை வீதிகலீல் கொடுக்கலாம்!
ஆனால் எப்படி படிக்க வைப்பது!?//
i agree with u comrade ,
same question ,i too have ,
why dont we have some group suggestions/discussions invovling house wifes,college/school going kids and the
best suggestions ,can bag a prize,and a title too -i dont mind sponsoring the first and second !!!!!
நல்ல யோசனை..
நிரந்தர தீர்வாக மரம் நடலாம் என்பதை சிறந்த யோசனையாக சொல்கிறார்கள்.
எங்க ஊர்ல புதுசா ஒரு நூலகம் திறக்குறாங்க. அங்க மரம் நடலாம்னு இருக்கோம். எந்த மாதிரியான மரங்கள் நடலாம், எங்க கிடைக்கும்னு சொன்னீங்கனா நல்லாருக்கும். நான்கு மரங்களுக்கு இடம் இருக்கு.
வீடு வீடாக கொண்டு போய் இல்லத்தரசிகளிடம் தரலாம்.. அவர்கள்தான் இதில் முக்கியமானவர்கள்.. ஒவ்வொரு பதிவரும் அவரவர் இருக்கும் பகுதிகளில் இதைச் செய்யலாமே..
நான் கூட என்னமோ,ஏதோன்னு நினைச்சு வந்தா,"எல்லோருக்கும் தண்ணி காமிச்சிட்டீங்களே."
சிறந்த பணி.
வாழ்த்துகள்.
நல்ல முயற்சி.
மிக நல்ல விஷயம். எல்லோரும் செயல் படுத்த வேண்டும்.
அடுத்த கல்வியாண்டில் தண்ணீர் சிக்கனம் குறித்து பள்ளி கல்லூரிகள்ல் எதாவது நிகழ்ச்சி, ஓவிய போட்டி, தனியார் வானொலி நிலையத்துடன் பதிவர் பேரவை (?!) சேர்ந்து பொது மக்களிடம் கொண்டு செல்லாம் ;))
சமூக அக்கறைக்கு வாழ்த்துகள்.
தொழில் நகரங்களில் இது போன்ற முயற்சிகள் தேவையில்லை. அரசாங்கமே மறைமுகமாக உணர்த்தி விடுகிறது?
மூன்று மணி நேரம் மின்சார வெட்டு என்றார்கள். இப்போது 5 மணி நேரத்தை தாண்டி போய்க் கொண்டுருக்கிறது. மின்சாரம் மிச்சம்.
தண்ணீர் பொதுக்குழாய்களில் பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த 300 குடங்கள் வரைக்கும் தொடர்ந்து வரிசையில் இடம் பிடித்தபடியே இருக்கிறது. கொண்டு போய் பயன்படுத்துபவர்களுக்கு எந்த அறிவுரையும் தேவையாய் இருக்காது.
வாரம் ஒரு தடவை குளிக்க துவைக்க ஒகேனக்கல் போய்க் கொண்டுருந்தவர்களை மொத்தமாக குளிப்பாட்டி...........
என்ன செய்வது? நீங்கள் உருவாக்கிய தாக்கம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
துணிகளை ஆட்டமேட்டிக்வாஷிங் மெஷினில் துவைப்பதாலும் தண்ணீர் அதிக செலவாகிறது.ஷெமி ஆட்டமேட்டிக் வாஷிங்மெஷின் பயன்படுத்தினால்
தண்ணீர் அளவுகுறையும்
நான் தண்ணீரை பற்றி அப்துல் கலாமின் ஒரு பிரசன்டேசனை வைத்து எழுதியது. இலங்கை சஞ்சிகை ஒன்றிலும் பிரசுரமாகியது. அதன் லிங்க் கீழே
http://yovoice.blogspot.com/2009/09/2070.html
எந்தெந்த விஷயத்துக்கு சிக்கனம் என்று பார்க்க வேண்டும். இந்த கால கட்டத்தில் தண்ணீர் சிக்கனத்தை விட தண்ணீர் ரிசோர்ஸ்களை அதிக்கப்படுத்த வேண்டும். அதாவது முடிந்த அளவு மரங்களை நட்டு பராமரிப்பதே முதல் படியாக இருக்க முடியும். சிக்கனமும் தேவைதான். ஆனால் உற்பத்திப் பெருக்கமே தண்ணீருக்கு முதல் தேவை. அதுவும் முடியக்கூடிய செயல்தான். மேலும் மழை நீர் சேமிப்பு சரியாகச் செய்யப்பட வேண்டும்.
துண்டுப் பிரசுரங்கள் தண்ணீர் சிக்கனத்தை விட மரம் நடுதலையும், தண்ணீர் மாசு படுவதை தடுப்பதையும், மொத்த மாசுக்கட்டுப் பாட்டையும் (புகை, குப்பை கூளங்கள் தூசி போன்ற இவையனைத்தும் பசுமையைப் பாதிக்கும்) வலியுறுத்தினால் மிகவும் நல்லது. ஏனென்றால் என்ன சிக்கனம் செய்தாலும் தண்ணீர் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று. அதனால் இருக்கும் தண்ணீர் சோர்ஸ்களைப் பாதுகாப்பதிலும் அதப் பெருக்குவதிலும் கவனம் செலுத்தினால் இன்னும் நல்லது.
மரங்கள் மழையை ஈர்க்கும். அதனால் தண்ணீர் வளம் பெருகும். அது வருங்கால சந்தியினருக்கும் உபயோகமாகும். இல்லையென்றால் நாம் சிக்கனமாக 10 லிட்டர் உபயோகப் படுத்தினால் நம் சந்ததியினருக்கு இன்னும் சிக்கனமாக 5 லிட்டர் உபயோகப் படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டி வரும்.
சிக்கனமும் தேவைதான். ஆனால் அதை விட தண்ணீர் வளம் பெருக்குவது இன்னும் நன்மை தரும்.
மரம் இருந்தால்தான் மழை வரும். மரத்தை வெட்டினால்தான் காகிதம் வரும்.என்ன பண்ணலாம்?கார்த்திகைபாண்டியன் இடுகையோட தலைப்புதான்...
முதலில் நமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரை உறுஞ்சும் குழி அமைத்து சேமிப்போம்.
முதலில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரம் வெட்டுவதை நிறுத்தச் சொல்லுங்கள்....
நல்ல பதிவு...
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்க.. கொஞ்சம் உப்பு தூக்கலான பஜ்ஜி, காரம் இதுமாதிரி குடுங்க. மீட்டிங் ஹால்ல எங்கயும் தண்ணி வக்காதீங்க..
கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் தண்ணி தாகமெடுக்கும். அப்போ தண்ணியோட அருமை, தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் பத்தி பேசுங்க. தண்ணீரை சேமிக்க என்னவெல்லாம் செய்யணும்னும் பேசுங்க. மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லுங்க.
மறந்துடாம எல்லாருக்கும் தண்ணி கடைசியிலயாவது குடுத்துடுங்க.
நல்ல விசயம்.
வாழ்த்துக்கள்.
"Water Pollution" என்பது ஒரு கொலைக்குச்சமம். காளிங்கராயன் வாய்க்காலில் பாருங்கள் தண்ணீர் எப்படி கழிவு நீராக ஓடுவது தெரியும். நீர் சேமிப்பும் கூடவே நீர் மாசு பற்றியும் சொல்லலாம்.
//"Water Pollution" என்பது ஒரு கொலைக்குச்சமம். //
பள்ளிபாளையம் பாலத்தில் ஒவ்வொரு முறை செல்லும் போது தோன்றுவதும் இதுவே
நல்ல செயல்
வாழ்த்துகள்.
சமூக பிரச்சனைக்கு தீர்வு கேட்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இன்றைய நமது உடனடிக்கடமை, நீர் சிக்கனம், நீர் ம்றுசுழற்சி,மழை நீர் சேகரிப்பு , நீர்மாசுபடுதலைத்தடுப்பது தான். திருப்பூர் ஜெய்வாபாய் மா நகராட்சிப்பள்ளியில் உள்ளது போல மழை நீர்சேகரிப்பும்,கழிவு நீர் மறுசுழற்சியும் அப்பள்ளியில் தண்ணீர் பிரச்சனைகளை 2000-ம் ஆண்டில் இரு ந்து தீர்த்து வருகிறது. செயல்முறைகளை விளக்கத்தயாராக இருக்கிறேன்.பயன்ப்டுத்துவது உங்கள் விருப்பம். ஆ.ஈசுவரன்,திருப்பூர்.
அடடா... இத்தனை நல்ல விசயங்கள் போயிகிட்டு இருக்கு... நான் கவனிக்கவே இல்லிங்களே... செஞ்சிருவோம்!
என்னுடைய வலைபூவை குழுமத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி! நானும் ரவுடி... நானும் ரவுடி!
Post a Comment