Tuesday, April 6, 2010

சிறுவனுக்கு உதவுங்கள்....

நண்பர்களுக்கு,

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.


எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.


கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk

முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt


தொலைப்பேசி எண்: 9791460680
நன்றி : http://umakathir.blogspot.com9 Comentários:

Thenammai Lakshmanan said...

அட கடவுளே என்ன கொடுமை இது..எவ்வளவு வலித்திருக்குமோ..................

தாராபுரத்தான் said...

இந்தியன் வங்கி. கணக்கு எண்;745331967 P/மாதவன்.கச்சேரி பாளையம். கள்ளக் குறிச்சி....கரைக்டா..முதல் வேலை,,ரூ.500..என்னால் முடிந்தது.

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

//thenammailakshmanan said...
அட கடவுளே என்ன கொடுமை இது..எவ்வளவு வலித்திருக்குமோ..................//

ஆம்.. நமமாலும் அந்த வலி உணரமுடிகிறது.... நன்றி..

//தாராபுரத்தான் said...
இந்தியன் வங்கி. கணக்கு எண்;745331967 P/மாதவன்.கச்சேரி பாளையம். கள்ளக் குறிச்சி....கரைக்டா..முதல் வேலை,,ரூ.500..என்னால் முடிந்தது.//

நன்றி தாராபுரத்தான் அவர்களே....

எல் கே said...

nanbare naalai enathu valaipathivil idai podugiren. ennalan uthavi

Unknown said...

பார்க்கவே ரொம்ப பரிதாபமா இருக்கு.....அந்த பையனுக்கு என்னால முடிந்த ரூ.1000 அனுப்பி இருக்கேன்.......அதிக பட்சம் நாட்களுக்குள் கிடைத்து விடும்...........

முருகன்

cheena (சீனா) said...

இடுகையைப் படித்த உடன் பணம் அனுப்ப மனம் துடிக்கிறது. ஆனால் இணிஅயத்தில் சென்று அனுப்ப முயன்றால் - அது ஐஎஃபெஸ்சி கோடு கேட்கிறது - அக்கிளைக்கு யாராவது அக்கோடு கொடுக்க இயலுமா ..
உதவினால் நன்றி உடையவனாக இருப்பேன்.

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
நட்புடன் சீனா

கபீஷ் said...

@Mr.Cheena

Name : KACHARAPALAYAM
IFSC - CODE : IDIB000K001
MICR - CODE : 606019007
CIRCLE : CUDDALORE
Address : 10 - F, Gomuhi Dam Road
Kacharapalayam
Vadakkanandal Post

ஜோசப் பால்ராஜ் said...

தற்சமயம் என்னால் எனது இணைய வழி சேவையை உபயோகிக்க இயலவில்லை. புது அக்கவுண்டிற்கு அனுப்ப ரெஜிஸ்டர் செய்யும் போது எனது மொபைலுக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் வரும். அந்த மொபைல் என் தற்சமயம் ரோமிங்கில் இல்லாமையால் சிங்கை வந்ததும் அனுப்புகிறேன்.

செய்திக்கு நன்றி.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO